பழநிக்கு இணையான தலமாகப் போற்றப்படுவது சென்னையில் உள்ள வடபழநி ஆண்டவர் திருக்கோயில். பழநிக்குச் செல்ல முடியாத பக்தர்கள் இத்திருக்கோயிலுக்கு வந்து வடபழநி ஆண்டவனை வேண்டிச் சென்றனர். சென்னையின் அடையாளங்களுள் ஒன்றாக மாறிவிட்ட இந்தத் திருக்கோயிலில் கும்பாபிஷேகத் திருப்பணிகள் நாளை தொடங்குகின்றன.
இதற்கு முன்பு கும்பாபிஷேகம் 2007-ம் ஆண்டு நடைபெற்றது. 13 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது கும்பாபிஷேகப் பணிகளுக்குத் தயாராகியுள்ளது, வடபழநி ஆண்டவர் திருக்கோயில். இதையொட்டி, கும்பாபிஷேகப் பணிகளுக்கான கோயில் பாலாலய விழா மார்ச் 11, 12 ஆகிய இரண்டு நாள்களுக்கு நடைபெறுகிறது.
முதல்நாள் நிகழ்ச்சியாக, மார்ச் 11 புதன்கிழமையன்று காலை 9 மணி முதல் 11.30 மணிவரை அனுக்ஞை, கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம் ஆகிய பூஜைகள் நடைபெறும். மாலை 6 மணியிலிருந்து இரவு 8 மணிக்குள் முதல்கால யாகபூஜைகள் தொடங்கி நடைபெறும். பக்தர்களுக்குப் பிரசாதம் வழங்கப்படும். இரவு 9.30 மணிக்கு பூர்ணாகுதி தீபாராதனை நடைபெறும்.
மறுநாள் மார்ச் 12-ம் தேதி அதிகாலை 5.50 மணிக்கு இரண்டாம்கால யாகபூஜைகள் நடைபெறும். அடுத்து காலை 8 மணிக்கு மஹா பூர்ணாகுதி தீபாராதனை நடைபெறும். அதைத் தொடர்ந்து முக்கிய நிகழ்வான பாலாலய பிரதிஷ்டை காலை 8.30 மணிக்கு நடைபெறுகிறது. அதையடுத்து காலை 9.15 மணிக்குத் திருப்பணிகள் தொடங்கப்பெறும். பாலாலய விழாவைக் காண்பதற்குத் திரளான பக்தர்கள் கூடுவார்கள் என்பதால் பாதுகாப்பு மற்றும் பக்தர்களின் வசதிக்கான ஏற்பாடுகளை காவல்துறையும் கோயில் நிர்வாகமும் இணைந்து மேற்கொண்டு வருகின்றன.
இதுகுறித்து அறநிலையத் துறையின் மக்கள் தொடர்பு அலுவலர் த.மருதபிள்ளை பேசியது:
சென்னையின் புகழ்வாய்ந்த இந்தத் திருக்கோயிலில் நடைபெறுகிற பாலாலய விழாவை பக்தர்கள் வந்து சிறப்பித்து, வடபழநி ஆண்டவர் அருள்பெற்றுச் செல்ல வேண்டும். திருப்பணிகள் மிகவும் சிறப்பான முறையில் நடைபெறவுள்ளது என்றார்.
பஞ்ச பூதங்களில் நீர்தலமாக விளங்குவது திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர்- அகிலாண்டேஸ்வரி கோவில். இங்கு ஆண்டுதோறும் பங்குனி மண்டல பிரம்மோற்சவம் 48 நாட்கள் கொண்டாடப்படும். இந்த ஆண்டுக்கான விழா நேற்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. பிரம்மோற்சவ விழா அடுத்த மாதம்(ஏப்ரல்) 11-ந் தேதி வரை நடைபெறுகிறது.
பிரம்மோற்சவத்தையொட்டி சுவாமி, அம்மன், விநாயகர், சோமாஸ்கந்தர் உள்ளிட்ட பஞ்சமூர்த்திகள் சிறப்பு அலங்காரத்தில் நேற்று காலை 9.30 மணிக்கு கோவில் வளாகத்தில் உள்ள கொடிமரம் அருகே வந்தனர். பின்னர், கொடிமரத்திற்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடைபெற்றன. பின்னர் காலை 10 மணிக்கு மேஷ லக்னத்தில் பெரிய கொடி ஏற்றப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
விழாவையொட்டி வருகிற 21-ந் தேதி 8 திக்கும் கொடியேற்றத்துடன் பங்குனி தேர் திருவிழா தொடங்குகிறது. அன்று காலை தேருக்கு முகூர்த்தக்கால் நடப்படுகிறது. அன்றிரவு சோமாஸ்கந்தர் புறப்பாடும், 2-ம் நாள் சூரியபிரபை வாகனத்திலும், சந்திரபிரபை வாகனத்திலும், 3-ம் நாள் பூத வாகனத்திலும் மற்றும் காமதேனு வாகனத்திலும், 4-ம் நாள் கைலாச வாகனத்திலும், கிளி வாகனத்திலும், 5-ம் நாள் வெள்ளி ரிஷப வாகனத்திலும் சுவாமி, அம்மன் எழுந்தருளி வீதி உலா வருகின்றனர்.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பங்குனி தேரோட்டம் வருகிற 26-ந் தேதி நடைபெறுகிறது. அதற்கு முந்தைய நாள் தெருவடைச்சான் நிகழ்ச்சி நடைபெறுகிறது. 27-ந்தேதி வெள்ளி மஞ்சத்திலும், 28-ந் தேதி வெள்ளிகுதிரை வாகனத்திலும், பல்லக்கிலும், 29-ந் தேதி அதிகார நந்தி வாகனத்திலும், சேஷ வாகனத்திலும் சுவாமி, அம்மன் எழுந்தருளி வீதி உலா வருகின்றனர்.
30-ந் தேதி காலை நடராஜர் ஊடல் உற்சவம், நண்பகல் தீர்த்தவாரி நடைபெறுகிறது. மாலை ஏகசிம்மாசனத்தில் சுவாமி, அம்மன் எழுந்தருளி வீதி உலா வருகின்றனர். இதனைத் தொடர்ந்து சொக்கர் உற்சவம், மவுனோத்சவம், சண்டிகேஸ்வரர் உற்சவம் நடைபெறுகிறது.
ஏப்ரல் 9-ந் தேதி பஞ்சப்பிரகார விழா நடைபெறுகிறது. அதையொட்டி சுவாமி அம்மன் வேடத்திலும், அம்மன் சுவாமி வேடத்திலும் வெள்ளி மஞ்சத்தில் எழுந்தருளி 5-ம் பிரகாரத்தில் வீதி உலா வருகின்றனர்.
திருச்சி திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரி-ஜம்புகேஸ்வரர் ்கோவில் வளாகத்தில் உள்ள கொட்டாரம் 100 கால் மண்டபம் அருகே உள்ள காலி இடத்தை தூய்மை செய்து அங்கு வாழைக்கன்றுகள் நடவும், பூச்செடிகள் வளர்க்கவும் முடிவு செய்யப்பட்டது. இதற்கான பணியில் நேற்று கோவில் பணியாளர்கள் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, கடப்பாறை, மண்வெட்டி உள்ளிட்ட ஆயுதங்களால் குழி தோண்டிய போது, வித்தியாசமாக சத்தம் கேட்டது. இதனையடுத்து அதனை மெதுவாக தோண்டியபோது, செம்பு பெட்டகம் ஒன்று தென்பட்டது. அந்த பெட்டகத்தை எடுத்து பார்த்தபோது, அதில் தங்கக்காசுகள் இருப்பது கண்டு அனைவரும் ஆச்சரியம் அடைந்தனர். இது குறித்து ஊழியர்கள், கோவில் நிர்வாக அதிகாரி மாரியப்பனுக்கு தகவல் தெரிவித்தனர்.மேலும் வருவாய்த்துறை அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
ஸ்ரீரங்கம் தாசில்தார் ஸ்ரீதர், மண்டல துணை தாசில்தார்கள் ரவி, சுரேஷ், வருவாய் ஆய்வாளர் திலகவதி, கிராம நிர்வாக அதிகாரி அருண்பிரியா மற்றும் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலையில் கலயத்தில் இருந்த தங்கக்காசுகள் எடுத்து எண்ணப்பட்டன.
அந்த பெட்டகத்தில் 504 தங்கக்காசுகள் இருப்பதை அதிகாரிகள் உறுதி செய்தனர். அவற்றில் ஒரு தங்க காசு மட்டும் 10 ரூபாய் நாணயம் அளவிலும், மீதமுள்ள தங்க காசுகள் சட்டை பட்டன் அளவிலும் இருந்தது. இது 1 கிலோ 704 கிராம் எடைகொண்டதாகும். இதன் மதிப்பு ரூ.61 லட்சம் ஆகும். ஒவ்வொரு தங்க காசும் 3.3 கிராம் எடை உள்ளது. ஒன்று மட்டும் 10 கிராம் எடை உள்ளது என கூறப்படுகிறது.
அதன் பின்னர் அதிகாரிகள் முன்னிலையில், தங்கக்காசுகள் ஒரு பெட்டகத்தில் வைத்து பூட்டி சீல் வைக்கப்பட்டு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் மாவட்ட கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது. தங்கக்காசுகள் எந்த நூற்றாண்டைச் சேர்ந்தவை என்பது தெரியவில்லை. தொல்லியல் துறை அதிகாரிகள் ஆய்வுக்கு பிறகே அது, எந்த காலக்கட்டத்தை சேர்ந்தது என தெரிய வரும் என்று கோவில் நிர்வாக அதிகாரி மாரியப்பன் தெரிவித்தார்.
திருவானைக்காவல் கோவிலில் தங்கப்புதையல் கிடைத்தது ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருந்தாலும், இன்னும் புதையல் சிக்க வாய்ப்பிருக்குமா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது. எனவே, காலியான இடத்தை முழுமையாக தோண்டி ஆய்வு செய்திட வேண்டும் என்பது அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.
சென்னை
சிவபெருமானுக்கு உரிய விரதங்களில் மகா சிவராத்திரி விரதம் மிகவும் சிறப்பானது. இந்த புண்ணிய காலத்தில் சிவனின் நாமம் கூறி, நான்கு கால பூஜைகள் செய்து வழிபடுவது வழக்கத்தில் உள்ளது. அந்த வகையில் தமிழகம் முழுவதும் உள்ள கோவில்களில் மகா சிவராத்திரி விழா நேற்று இரவு கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
மகா சிவராத்திரி விழாவையையொட்டிகோவில்கள் மின்விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. சிவாலயங்களில் நேற்று இரவு முழுவதும் நான்கு காலங்களிலும் சாமிக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. சிவாராத்திரியையொட்டி மேற்கண்ட கோவில்களில் பக்தர்கள் விடிய, விடிய பயபக்தியுடன் தரிசனம் செய்தனர். அவர்களுக்கு பிரசாதங்களும் வினியோகம் செய்யப்பட்டன.
இதேபோல் திருவண்ணாமலை, சிதம்பரம், கும்பகோணம், திருவாரூர், சேலம், நெல்லை பாளையங்கோட்டை, தூத்துக்குடி, ராணிப்பேட்டை தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர்,பாபநாசம், நாகையில் நடைபெற்ற மகா சிவராத்திரி சிறைப்பு பூஜையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு, விடிய விடிய கொண்டாடங்களோடு, விரதம் இருந்து சிவனை தரிசனம் செய்தனர்.
மதுரை
மகாசிவராத்திரி பண்டிகை நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. விரதம் இருந்து விடிய விடிய கண் விழித்து சிவ தரிசனம் செய்வதன் மூலம் இறைவனின் அருளை பெறலாம். சிவ பெரமான் அபிஷேகப்பிரியர். இந்த நாளில் மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களும் அவரவர் ராசிக்கு உரிய பொருட்களால் அபிஷேகம் செய்வதன் மூலம் சிவபுண்ணியம் கிடைக்கும்.
மனிதர்களுக்கு அத்தியாவசிய தேவை உணவு, உறக்கம். இந்த இரண்டையும் விலக்கி சிவனுக்காக விரதம் இருக்கும் நாள்தான் மகாசிவராத்திரி விரதம். சிவராத்திரி விரதம் இருப்பதால் தெரியாமல் செய்த பாவங்களுடன், தெரிந்தே பாவங்கள் செய்திருந்தாலும் அவை நம்மை விட்டு நீங்கும் என்பது நம்பிக்கை. மகா சிவராத்திரி நாளில் நாள் முழுவதும் சிவனை நினைத்து விரதம் இருந்தால் நினைத்த காரியம் நிறைவேறும்.
மேஷ ராசிக்காரர்கள், மகாசிவராத்திரி அன்று வெல்லம் கலந்த நீரை சிவலிங்கத்திற்குப் படைத்து, சிவ பஞ்சாக்ஷர மந்திரத்தை சொல்ல வேண்டும். இதனால் நினைத்தது அனைத்தும் நடக்கும்.
ரிஷப ராசிக்காரர்கள், தயிரைக் கொண்டு சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்தால், வீட்டில் உள்ள பணப் பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம்.
மிதுன ராசிக்காரர்கள், சிவலிங்கத்தை கரும்புச்சாறு கொண்டு அபிஷேகம் செய்தால் ஆசைகள் நிறைவேறும். பாவங்கள் நீங்கும்.
கடக ராசிக்காரர்கள், சர்க்கரை சேர்த்த பால் கொண்டு சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்து, மந்தாரைப் பூவால் அலங்கரித்தால், நினைக்கும் காரியம் கூடிய விரைவில் நடக்கும்.
சிம்ம ராசிக்காரர்கள், மகாசிவராத்திரி அன்று சிவப்பு சந்தனம் கலந்த பாலால் சிவனுக்கு அபிஷேகம் செய்தால், சிவன் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை வழங்குவார்.
கன்னி ராசிக்காரர்கள், பால் மற்றும் நீரால் சிவலிங்கத்தை அபிஷேகம் செய்தால், நல்ல ஆரோக்கியத்தை அருள்வார். நோய் நொடிகள் நீங்கும்.
துலாம் ராசிக்காரர்கள், பசு மாட்டுப் பாலால் சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்தால், வாழ்வில் நல்ல செல்வ செழிப்போடு இருக்க அருள்புரிவார்.
விருச்சிக ராசிக்காரர்கள், தேன் அல்லது சர்க்கரை கலந்த நீரால் சிவனுக்கு அபிஷேகம் செய்வது மிகவும் நல்லது.
தனுசு ராசிக்காரர்கள், குங்குமப்பூ கலந்த பாலால் சிவனுக்கு அபிஷேகம் செய்து, சிவ பஞ்சாக்ஷர மந்திரத்தைப் படிக்க வேண்டும். இதனால் வாழ்வில் உள்ள இன்னல்கள் நீங்கும்.
மகர ராசிக்காரர்கள், மகாசிவராத்திரி அன்று சிவனுக்கு நல்லெண்ணெய் அபிஷேகம் செய்து, வில்வ பழத்தைப் படைத்தால், வாழ்வில் எதிலும் வெற்றிக் கிட்டச் செய்வார்.
மகாசிவராத்திரி அன்று கும்ப ராசிக்காரர்கள், இளநீர் அல்லது கடுகு எண்ணெய் கொண்டு சிவலிங்கத்தை அபிஷேகம் செய்தால், நிதி ஆதாயம், லாபம் கிடைக்க அருள்புரிவார்.
மீன ராசிக்காரர்கள், மகாசிவராத்திரி அன்று குங்குமப்பூ கலந்த பாலால் சிவனுக்கு அபிஷேகம் செய்தால், செல்வ செழிப்போடு இருக்க சிவன் அருள்புரிவார்.
உலகப்புகழ் பெற்ற நாகூர் தர்கா நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ளது. ஜாதி மத பேதமின்றி அனைத்து தரப்பு மக்களும் வந்து வணங்கி செல்லும் இடமாக நாகூர் தர்கா விளங்கி வருகிறது. நாகூர் தர்காவிற்க்கென தனியாக ஸ்கீம் உள்ளது. அதன்படி நாகூர் தர்கா நிர்வாகம் இன்றளவும் இயங்கி வருகிறது. நாகூர் தர்காவிற்க்கான அறங்காவலர் குழு மற்றும் அட்வைசரி குழு என இரண்டு அமைப்புகள் உள்ளது. இதில் அட்வைசரி குழு பொருளாதாரம் மற்றும் ஆலோசனைகளை உள்ளடக்கியது. நிர்வாகம் மற்றும் கிரியைகளை அறங்காவலர் குழு செய்து வரும்.
நாகூர் தர்கா நிர்வாகம் எட்டு அறங்காவலர்களை உள்ளடக்கியது. 8வது அறங்காவலாராக இருந்த ஹஜ்ரத் ஹாஜா வஞ்சுர் பக்கிர் (எ) சின்னதம்பி சாஹிப் நேரடி வாரிசின்றி கடந்த 04.12.2013 அன்று இறந்துவிட்டார். அன்னாரின் இடத்துக்கு அல்ஹாஜ் செய்யது காமில் சாஹிப் உள்ளிட்ட பலர் போட்டியிட்டனர். இந்நிலையில் வாரிசுதாரர்கள் பலரும் நீதிமன்றத்தில் முறையிட்டனர்.
இந்த தருணத்தில் கடந்த 2016ம் ஆண்டு தலைமை அறங்காவலர் பதவி காலம் முடிந்ததமையால், எட்டாவது அறங்காவலர் இல்லாத காரணத்தினால் தலைமை அறங்காவலர் தேர்தல் நடத்த முடியாமல் போனது. அதனை கருத்தில் கொண்டு, சென்னை நீதிமன்றம் நாகூர் தர்காவை நிர்வாகிக்க அலாவுதீன் இ.ஆ.ப (ஓய்வு) மற்றும் அக்பர் (மாவட்ட நீதிபதி ஓய்வு) ஆகியோரை உள்ளடக்கிய இடைக்கால குழுவினரை நியமித்து, அவர்கள் நாகூர் தர்காவை கடந்த 10.02.2017 முதல் நிர்வாகித்து வந்தனர். வருடா வருடம் நாகூர் தர்கா கந்தூரி சமயத்தில் புனித கிரியைகள் செய்ய உயர் நீதிமன்றம் நேரடியாக உத்தரவு வழங்கியும் வந்தது.
அல்ஹாஜ் செய்யது காமில் சாஹிப் சார்பில், மூத்த வழக்கறிஞர் ஹாஜா மெய்தீன் கிஸ்தி நீதிமன்றத்தில் வாதாடினார். அன்னாரின் கூற்றுப்படி சமரச கமிட்டி அமைக்க நீதிமன்றம் இசைந்தது. சமரச கமிட்டியில் உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி கலீபுல்லா, உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி பாஷா, உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி அக்பர் அலி தலைமையில் சமரச கமிட்டி அமைத்து இதற்கு தீர்வு காணப்பட்டது.
அதன்படி முதல் எட்டாவது அறங்காவலாராக அல்ஹாஜ் செய்யது காமில் சாஹிப் நியமிக்கபட்டார். பின்னர் சுழற்சி முறையில் சுல்தான் கலீபா சாஹிப், ஹாஜா நஜ்மூதின் சாஹிப் மற்றும் செய்யது யூசுப் சாஹிப் இருக்க சமரசமாக ஓப்புக்கொள்ளப்பட்டது. பின்னர் இந்த வழக்கு கடந்த வாரம் நீதிபதி சிவஞானம் அமர்வில் விசாரனைக்கு வந்தது. எட்டாவது அறங்காவலர் விஷயம் முடிவுக்கு வந்துவிட்டபடியால் நாகை நீதிமன்றத்தில் உள்ள வாரிசு வழக்கு வாபஸ் முடிவு எட்டப்பட்டவுடன் நாகூர் தர்கா தற்காலிக நிர்வாகம் நீக்கப்படுவதாகவும், உடனே பிரசிடண்ட் கலீபா சாஹிப் தலைமையில் இயங்கிய அட்வைசரி போர்டு அமைந்துவிடும் என்றும் எட்டாம் அறங்காவலரையும் இணைத்து அறங்காவலர்களுக்குள் நாகூர் தர்காவிற்க்கு புதிய மானேஜிங் டிரஸ்டி ஸ்கீம் படி தேர்வு செய்யப்பட வேண்டும் என நீதிபதி தனது தீர்ப்பில் கூறியுள்ளார். வரும் ஜனவரியில் துவங்க இருக்கும் நாகூர் தர்கா கந்தூரியை அறங்காவலர் குழு சிறப்பாக நடத்த வேண்டும் எனவும் கூறியுள்ளார். இதனால் கடந்த ஆறு வருடங்களாக நிலுவையில் இருந்த நாகூர் தர்கா நிர்வாக வழக்கு முடிவுக்கு வந்தது. மேலும் மிகவும் திறன்பட செயல்பட்டு சமரச கமிட்டி மற்றும் நாகூர் தர்கா விஷயத்தில் நல்ல தீர்வை கண்ட சென்னை உயர் நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் ஹாஜா மெய்தீன் கிஸ்தியை நீதிபதி பாரட்டினார்.