சிட்னி
20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இரட்டை சதம் அடிப்பது என்பது எளிதான காரியம் அல்ல. இதுவரை ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே பல வீரர்கள் இரட்டை சதம் அடித்து உள்ளனர். ஆனால் 20 ஓவர் கிரிக்கெட்டில் எந்த வீரராலும் இரட்டைசதம் அடிக்க முடியவில்லை.
ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஆரோன் பிரஞ்ச், கடந்த 2018-ம் ஆண்டில் நடந்த ஜிம்பாப்வே அணிக்கு எதிரான ஆட்டத்தில் 76 பந்துகளில் 172 ரன்கள் எடுத்த போதிலும் அவரால் இரட்டை சதத்தை எட்டமுடியவில்லை. அதேபோல் கடந்த 2013-ம் ஆண்டு நடந்த ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்காக ஆடிய வெஸ்ட்இண்டீஸ் அதிரடி ஆட்டக்காரர் கிறிஸ் கெய்ல் புனே வாரியர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 66 பந்துகளில் 175 ரன்கள் குவித்து பிரமிக்க வைத்தார். ஆனால் அவரால் இரட்டை சதத்தை தொடமுடியவில்லை.
இந்த நிலையில் கிரிக்கெட் ரசிகர்கள் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இரட்டை சதம் அடிக்க போகும் வீரர் யார், அவர் எந்த நாட்டை சேர்ந்தவராக இருப்பார்? என்று ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் பிராட் ஹாக்கிடம் சமூக வலைதளத்தில் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதில் அளித்த பிராட் ஹாக், ‘என்னை பொறுத்தவரை தற்போதையை வீரர்களில் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இரட்டை சதம் அடிக்கும் தகுதி படைத்த வீரர் இந்தியாவின் ரோகித் சர்மா மட்டும் தான். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் சிறந்த ஸ்டிரைக் ரேட் வைத்துள்ளார். எல்லா நேரங்களிலும் பெரிய ஷாட்டுகள் அடிப்பதில் வல்லவராக இருக்கிறார். பலவிதமான ஷாட்டுகள் மூலம் மைதானத்தின் எல்லா புறங்களிலும் சிக்சர், பவுண்டரிகளை விளாசுகிறார்’ என்று தெரிவித்துள்ளார்.
இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரரான ரோகித் சர்மா கடந்த 2017-ம் ஆண்டு இந்தூரில் நடந்த இலங்கைக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் அதிகபட்சமாக 118 ரன்கள் குவித்தார். அவர் இதுவரை 108 இருபது ஓவர் போட்டிகளில் விளையாடி 2,773 ரன்கள் எடுத்துள்ளார். இதில் 4 சதங்களும், 21 அரைசதங்களும் அடங்கும். அதேபோல் ஒருநாள் போட்டியில் தனிநபர் அதிகபட்சமாக கடந்த 2014-ம் ஆண்டு இலங்கை அணிக்கு எதிரான ஆட்டத்தில் 264 ரன்கள் குவித்து சாதனை படைத்துள்ளார்.
ஐபிஎல் 2020 சீசன் மார்ச் மாதம் 29 ஆம் தேதி தொடங்குகிறது. ஆனால் கொரோனா பீதியில் ஆட்டம் நடைபெறுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இதற்கிடையில் கட்டாயம் போட்டியை நடத்த வேண்டுமென்றால் பார்வையாளர்கள் இல்லாமல் மூடிய மைதானத்திற்குள் நடத்திக் கொள்ளலாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இதனால் போட்டி நடைபெற்றால் ரசிகர்கள் இல்லாமல் நடைபெறும். இந்நிலையில் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த வீரர்கள் கலந்து கொள்வது அவர்களுடைய தனிப்பட்ட விருப்பம் என்று அந்நாட்டு கிரிக்கெட் சங்கம் தெரிவித்துள்ளது.
அம்மான்
டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கான ஆசிய மண்டல தகுதி சுற்று குத்துச்சண்டை போட்டி ஜோர்டான் தலைநகர் அம்மானில் நடந்தது. இதில் கடைசி நாளான நேற்று நடக்க இருந்த ஆண்களுக்கான 69 கிலோ உடல் எடைப்பிரிவின் இறுதிப்போட்டியில் காமன்வெல்த் விளையாட்டு சாம்பியனான இந்திய வீரர் விகாஸ் கிருஷ்ணன், ஜோர்டான் வீரர் ஜியாத் இஷாஷ்சை சந்திக்க இருந்தார்.
அரைஇறுதிசுற்றின் போது இடது கண் இமை பகுதியில் காயம் அடைந்த விகாஸ் கிருஷ்ணன் டாக்டர்கள் அறிவுறுத்தலின் பேரில் இறுதிப்போட்டியில் இருந்து விலகினார். இதனால் ஜியாத் இஷாஷ் களம் இறங்காமலேயே தங்கப்பதக்கத்தை கைப்பற்றினார். விகாஸ் கிருஷ்ணன் வெள்ளிப்பதக்கத்துடன் திருப்தி அடைய வேண்டியதானது.
63 கிலோ எடைப்பிரிவின் ‘பிளே-ஆப்’ சுற்றில் இந்திய வீரர் மனிஷ் கவுசிக் 4-1 என்ற கணக்கில் கடந்த காமன்வெல்த் விளையாட்டு சாம்பியனான ஆஸ்திரேலியாவின் ஹாரிசன் கார்சிட்டை சாய்த்து ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றார். அத்துடன் முந்தைய காமன்வெல்த் இறுதிப்போட்டியில் கண்ட தோல்விக்கும் பதிலடி கொடுத்தார். 81 கிலோ எடைப்பிரிவின் ‘பிளே-ஆப்’ சுற்றில் இந்தியாவின் சச்சின் குமார் 0-5 என்ற கணக்கில் தஜிகிஸ்தான் வீரர் ஷப்போஸ் நெக்மதுல்லோவிடம் தோல்வி கண்டு ஒலிம்பிக் வாய்ப்பை கோட்டை விட்டார்.
டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு குத்துச்சண்டையில் இதுவரை இந்திய வீராங்கனைகள் மேரி கோம் (51 கிலோ), சிம்ரன்ஜித் கவுர் (60 கிலோ), லவ்லினா போர்கோஹைன் (69 கிலோ), பூஜா ராணி (75 கிலோ), வீரர்கள் அமித் பன்ஹால் (52 கிலோ), மனிஷ் கவுசிக் (63 கிலோ), விகாஸ் கிருஷ்ணன் (69 கிலோ), ஆஷிஷ் குமார் (75 கிலோ), சதீஷ்குமார் (91 கிலோ) ஆகிய 9 பேர் தகுதி பெற்றுள்ளனர்.
இந்தியாவில் இருந்து குத்துச்சண்டையில் ஒரு ஒலிம்பிக் போட்டிக்கு செல்லும் அதிகபட்ச வீரர், வீராங்கனைகள் எண்ணிக்கை இது தான். இதற்கு முன்பு 2012 ஆம் ஆண்டு லண்டனில் நடந்த ஒலிம்பிக் போட்டிக்கு 8 இந்தியர்கள் தகுதி பெற்றதே அதிகபட்சமாக இருந்தது.
![]() |
இஸ்லாமாபாத்
பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தால் நடத்தப்படும் பாகிஸ்தான் சூப்பர் லீக் போட்டிகள் விரைவில் தொடங்க உள்ளன. இப்போட்டிகளில், குவெட்டா கிளேடியேட்டர்ஸ் அணியில் விளையாடும் உமர் அக்மலிடம் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திலுள்ள ஊழல் கண்காணிப்பு ஆணையம் அண்மையில் விசாரணை நடத்தியது.
இதை சுட்டிக்காட்டி அந்த ஆணையத்தின் விசாரணை முடிவடையும் வரையில் அனைத்து வகையிலான கிரிக்கெட் நடவடிக்கைகளிலும் ஈடுபடுவதற்கு உமர் அக்மலுக்கு தற்காலிக தடை விதிக்கப்படுவதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
அக்மல் இடைநீக்கம் செய்யப்பட்ட குற்றத்தின் தன்மையை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் வெளியிடவில்லை. சமீபத்தில் தான், லாகூரில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் உடற்பயிற்சி பரிசோதனையின் போது ஒரு பயிற்சியாளரிடம் மோதல் போக்கை கடைபிடித்து உமர் அக்மல் தடையில் இருந்து தப்பினார்.
ஆசிய மல்யுத்தம் சாம்பியன்ஷிப் போட்டிகள் டெல்லியில் நடைபெற்று வருகின்றன. இதில் வியாழன்கிழமை நடைபெற்ற பெண்களுக்கான 67 கிலோ பிரிவு போட்டியில், இந்திய வீராங்கனை திவ்யா கக்ரன், ஜப்பானைச் சேர்ந்த வீராங்கனை நருஹா மட்சுயுகியை தோற்கடித்து தங்கப் பதக்கம் வென்றார்.
முன்னதாக, பல்வேறு எடைப்பிரிவுகளில் புதன்கிழமை நடைபெற்ற போட்டிகளில் இந்திய வீரர், வீராங்கனைகள் மூன்று வெண்கல பதக்கங்களை வென்றனர்.ஹரியானாவைச் சேர்ந்த ஆசு, ஹர்தீப், பஞ்சாப்பை சேர்ந்த அதித்யா குண்டூ ஆகியோர் வெங்கலம் வென்றனர்.
ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியா இதுவரை 4 வெண்கலம், இரண்டு தங்கம் வென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், சரிதா மோர், பிங்கி, நிர்மலாக தேவி ஆகியோர் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி டி20 தொடரை முழுமையாக கைப்பற்றியது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் நியூசிலாந்து ஒருநாள் தொடரை முழுமையாக கைப்பற்றியது. இதையடுத்து இரு அணிகளும் மோதும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி வரும் 21ம் தேதி வெலிங்டன் மைதானத்தில் நடைபெறுகிறது.
இதற்கு முன்னதாக நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் கேப்டன் விராட் கோலியிடம் அவரது கிரிக்கெட் எதிர்காலம் குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த கோலி கூறியது:
அடுத்த 3 ஆண்டுகளுக்கு இதே உத்வேகத்துடன் தான் விளையாடுவேன். 2008ஆம் ஆண்டு முதல் 12 ஆண்டுகளாக கிரிக்கெட் விளையாடி வருகிறேன், வருடத்தில் 300 நாட்கள் கிரிக்கெட்டிற்காக நேரம் ஒதுக்கி கடினமான உழைப்புடன் விளையாடி வருகிறேன்.
அடுத்த 3 ஆண்டுகளுக்கு தன்னுடைய கிரிக்கெட் வாழ்க்கையில் தற்போது இருக்கும் இதே உத்வேகத்துடன் தன்னால் திறம்பட விளையாட முடியும். வரவுள்ள இரண்டு டி20 உலகக்கோப்பை மற்றும் ஒருநாள் உலகக்கோப்பைத் தொடரில் விளையாட அதிக கவனம் செலுத்தி வருவதாகவும், தன்னுடைய 34 அல்லது 35 வயதில் கிரிக்கெட் களத்தில் இருந்து ஓய்வு பெறுவேன் என்று கூறினார்.
கொல்கத்தாவில் நடைபெற்ற இந்தப் போட்டியில் தொடக்கம் முதலே சென்னை அணி ஆதிக்கம் செலுத்தியது. ஆட்டத்தின் 7வது நிமிடத்திலும், 39வது இடத்திலும் சென்னை அணி வீரர்கள் கோல் அடித்தனர். இதற்கு பதிலடியாக 40வது நிமிடத்தில் கொல்கத்தா அணி கோல் அடித்தது. இதனால் முதல் பாதி ஆட்டத்தில் 2-க்கு ஒன்று என்ற கோல் கணக்கில் சென்னை அணி முன்னிலை வகித்தது.
ஆட்டத்தின் 2வது பாதியில் இரண்டு அணிகளும் கோல் அடிக்காததால் கூடுதல் நேரம் ஒதுக்கப்பட்டது. இதில் சென்னை அணி ஒரு கோல் அடித்தது. இதன்மூலம் சென்னை, 3-க்கு 1 என்ற கோல் கணக்கில் கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றி பெற்றது.
பெர்லின்
விளையாட்டு உலகின் உயரிய விருதான லாரியஸ் விருது ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது. 2019 ஆம் ஆண்டின் சிறந்த வீரருக்கான லாரியஸ் விருது கால்பந்து வீரர் மெஸ்சி மற்றும் கார் ரேஸ் வீரர் ஹாமில்டோனுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டது. 20 ஆண்டுகளில் விளையாட்டு உலகின் சிறந்து தருணமாக இந்திய கிரிக்கெட் அணியின் சச்சின் டெண்டுல்கரை, 2011 உலக கோப்பை இறுதி ஆட்டத்தில் வென்ற பின், வீரர்கள் தோளில் சுமந்து சென்ற நிகழ்வு தேர்வு செய்யப்பட்டு, விருது வழங்கப்பட்டது.
ஜெர்மனியில் நடந்த விருது வழங்கும் விழாவில் சச்சின் அதை பெற்றுக் கொண்டார். சிறந்த அணிக்கான விருது, தென் ஆப்ரிக்கா ரக்பி அணிக்கு வழங்கப்பட்டது. சிறந்த வீராங்கனையாக அமெரிக்க ஜிம்னாஸ்டிக் வீராங்கனை சைமன் பைல்ஸ் வென்றார்.
ஜோகன்னஸ்பர்க்
தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி தற்போது உள்ளூரில் இங்கிலாந்துக்கு எதிரான 20 ஓவர் போட்டி தொடரில் விளையாடி வருகிறது. அந்த அணி இந்தியாவில் அடுத்த மாதம் (மார்ச்) 12-ந் தேதி முதல் 18-ந் தேதி வரை சுற்றுப்பயணம் செய்து 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் போட்டி தொடரில் விளையாடுகிறது.
அதன் பிறகு பாகிஸ்தான் சென்று மூன்று ஆட்டங்கள் கொண்ட 20 ஓவர் போட்டி தொடரில் விளையாட திட்டமிட்டு இருந்தது. ஆனால் வீரர்கள் பணிச்சுமை காரணமாக தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின், பாகிஸ்தான் பயணம் ரத்து செய்யப்பட்டு இருப்பதாக அந்த நாட்டு கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. இந்த போட்டி தொடர் குறித்து இரு நாட்டு வாரியங்களும் கலந்து பேசி பின்னர் மாற்று தேதி அறிவிக்கப்படும் என்று தெரிகிறது.
விராட் கோலி தலைமையிலான இந்திய அணி ஒருநாள், டெஸ்ட், டி20 என அனைத்துவிதமான போட்டிகளிலும் அபாரமாக ஆடி வருகிறது. இந்த வெற்றியின் மூலம் டி20 கிரிக்கெட்டில் அதிக தொடர்களை வென்ற கேப்டன் என்ற சாதனையை படைத்துள்ளார். விராட் கோலி கேப்டன்சியில் இந்திய அணி வென்ற 10வது டி20 தொடர் இது.
ஆஸ்திரேலிய ஓபனில் காயம் காரணமாக சானியா மிர்சா தனது மகளிர் இரட்டையர் முதல் சுற்று போட்டியில் இருந்து தனது உக்ரேனிய பங்குதாரர் நதியா கிச்செனோக்குடன் நடுப்பகுதியில் இருந்து ஓய்வு பெற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இந்த போட்டியில் இருந்து இந்தியர் ஓய்வு பெறுவதற்கு முன்பு சீன ஜோடி ஜின்யுன் ஹான் மற்றும் லின் ஜு ஆகியோருக்கு எதிராக சானியா மிர்சா மற்றும் நதியா கிச்செனோக் 2-6, 0-1 என்ற கணக்கில் பின்தங்கியிருந்தனர்.
மகப்பேறு விடுப்புக்குப் பிறகு சானியா மிர்சாவின் முதல் கிராண்ட்ஸ்லாம் தோற்றத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தது இந்த காயம். ஹோபார்ட் இன்டர்நேஷனலில் இரட்டையர் பட்டத்தை வென்ற பின்னர் இந்திய-உக்ரேனிய ஜோடி சானியா மிர்சா மற்றும் நதியா கிச்செனோக் ஆகியோர் போட்டிகளில் புதிதாக வந்துள்ளனர். செய்தி நிறுவனமான பிடிஐ படி, சானியா பயிற்சியின் போது அவரது காலில் காயம் ஏற்பட்டுள்ளது.
33 வயதான இந்திய டென்னிஸ் நட்சத்திரம் இரண்டு வருட இடைவெளிக்கு பிறகு சுற்றுக்கு திரும்புகிறார். சானியா தனது வலது காலில் பெரிதும் கட்டிக்கொண்டு கோர்ட்டில் இயல்பாக செல்ல சிரமப்படுவதைக் காண முடிந்தது. சாய்னாவைத் தவிர, கிச்செனோக்கும் வலையில் போராடிக் கொண்டிருந்தார், பெரும்பாலும் எளிதில் தள்ளி வைக்கும் வாலிகளைக் காணவில்லை. 2-4 என்ற கணக்கில் சேவை செய்த சானியாவை சீனர்கள் உடைத்தனர், அவர்கள் செட்டை எளிதாக முடித்தனர்.
முதல் செட்டிற்குப் பிறகு இந்தியன் ஒரு இடைக்கால நேரத்தை எடுத்தார். விரைவில், இந்தோ-உக்ரேனிய ஜோடி இரண்டாவது செட்டின் முதல் ஆட்டத்தில் உடைக்கப்பட்டது, மேலும் சானியா தொடர கடினமாக இருந்தது.
முன்னதாக, கலப்பு இரட்டையர் போட்டியில் இருந்து சானியா விலகியிருந்தார், பார்ட்னர் ரோஹன் போபண்ணாவை கிச்செனோக்குடன் இணைந்து ஆடினார். கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தும் மூத்த வீரர் லியாண்டர் பேஸ், 2017 பிரெஞ்சு ஓபனில் வென்ற ஜெலினா ஓஸ்டாபென்கோவுடன் இணைந்துள்ளார். உள்ளூர் வைல்ட் கார்டில் நுழைந்தவர்கள் புயல் சாண்டர்ஸ் மற்றும் மார்க் போல்மன்ஸ் ஆகியோருக்கு எதிராக அவர்கள் போட்டியிடுகின்றனர்.