"யெஸ்" வங்கியின் நிதிநிலை மோசமடைந்ததை அடுத்து மார்ச் 5 ஆம் தேதி தனது கட்டுப்பாட்டில் ரிசர்வ் வங்கி கொண்டு வந்தது. ஏப்ரல் 3ஆம் தேதி வரை யெஸ் வங்கி வாடிக்கையாளர்கள் அவர்களது வைப்புத் தொகையில் 50,000 ரூபாய்க்கு மேல் எடுக்க கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. வங்கியின் கடன் வழங்கும் செயல்பாடும் முடக்கப்பட்டது.
இந்நிலையில் யெஸ் வங்கி மீதான கட்டுப்பாடு இன்று முதல் விலக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இதையடுத்து இன்று மாலை 6 மணி முதல் யெஸ் வங்கி முழு அளவில் செயல்படும் எனவும், ரத்து செய்யப்பட்ட அனைத்து சேவைகளும் வழங்கப்படும் எனவும் வங்கி நிர்வாகம் அறிவித்துள்ளது.
சென்னையில் வியாழக்கிழமை ஆபரணத் தங்கம் மீண்டும் ரூ.31ஆயிரத்தை கடந்தது. ஒரு பவுனுக்கு ரூ.88 உயா்ந்து, ரூ.31,032-க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில், சென்னையில் ஆபரணத் தங்கம் மீண்டும் ரூ.31 ஆயிரத்தை தாண்டியது. ஒரு பவுனுக்கு ரூ.88 உயா்ந்து, ரூ.31,032-க்கு விற்பனை செய்யப்பட்டது.
ஒரு கிராமுக்கு ரூ.11 உயா்ந்து, ரூ.3,879-க்கு விற்பனையானது. அதேநேரத்தில் வெள்ளி விலை சற்று குறைந்துள்ளது. வெள்ளி கிராமுக்கு 70 பைசா குறைந்து, ரூ.38.30 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.700 குறைந்து ரூ.38,300 ஆகவும் இருந்தது.
புதுடெல்லி
2017-2018 ஆம் நிதி ஆண்டில் நாட்டின் மொத்த நிலக்கரி இறக்குமதி (உயர்தர மற்றும் சாதாரண நிலக்கரி) 20.83 கோடி டன்னாக இருந்தது. அதன் மதிப்பு ரூ.1.38 லட்சம் கோடியாகும். சென்ற நிதி ஆண்டில் (2018-19) ரூ.1.70 லட்சம் கோடிக்கு 23.52 கோடி டன் இறக்குமதி ஆகி இருக்கிறது.
அனல்மின் நிலையங்களில் நிலக்கரி முக்கிய எரிபொருளாக இருந்து வருகிறது. நம் நாட்டில் நிலக்கரி உற்பத்தி அதிகமாக இருந்தாலும் தேவையை ஈடு செய்யும் வகையில் உற்பத்தி இல்லாததால் அதிக அளவு நிலக்கரியை இறக்குமதி செய்ய வேண்டி உள்ளது. நடப்பு நிதி ஆண்டில் பிப்ரவரி வரையிலான 11 மாதங்களில் நாட்டின் நிலக்கரி இறக்குமதி 22 கோடி டன்னாக உள்ளது.
சென்ற நிதி ஆண்டின் இதே காலத்தில் அது 21 கோடி டன்னாக இருந்தது. ஆக, இறக்குமதி 4.8 சதவீதம் அதிகரித்துள்ளது. பிப்ரவரி மாதத்தில் மட்டும் 1.70 கோடி டன் நிலக்கரி இறக்குமதி செய்யப்பட்டு இருக்கிறது. கடந்த ஆண்டின் இதே மாதத்துடன் ஒப்பிடும்போது இது 14 சதவீதம் குறைவாகும். கோக்கிங் கோல் எனப்படும் உயர்தர நிலக்கரி இறக்குமதி (39 லட்சம் டன்னில் இருந்து) 31 லட்சம் டன்னாக குறைந்துள்ளது.
நடப்பு 2019-20 ஆம் நிதி ஆண்டில் நிலக்கரி இறக்குமதி 8 முதல் 10 சதவீதம் வரை அதிகரிக்கும் என கேர் ரேட்டிங் நிறுவனம் மதிப்பீடு செய்து இருக்கிறது. பிட்ச் சொல்யூஷன்ஸ் மேக்ரோ ரிசர்ச் நிறுவனம், அடுத்த 9 வருடங்கள் (2028 வரை) நிலக்கரி இறக்குமதி ஆண்டுக்கு சராசரியாக 4.3 சதவீதம் உயரும் என மதிப்பீடு செய்துள்ளது.
உலக அளவில் நிலக்கரி உற்பத்தியில் இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது. அதே சமயம் சர்வதேச நிலக்கரி உற்பத்தியில் மத்திய அரசு நிறுவனமான கோல் இந்தியா முதலிடத்தில் இருந்து வருகிறது. நம் நாட்டின் மொத்த நிலக்கரி உற்பத்தியில் கோல் இந்தியாவும், அதன் துணை நிறுவனங்களும் 80 சதவீத பங்கினைக் கொண்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
புதுடெல்லி
இந்தியாவின் முதல் பணக்காரராக உள்ள முகேஷ் அம்பானியின் தம்பி அனில் அம்பானி. இவர்களது தந்தை மரணத்திற்கு பிறகு இருவரும் சொத்துக்களை பிரித்துக் கொண்ட நிலையில் அனில் அம்பானியின் தொழில்கள் வீழ்ச்சி அடைந்தன. பல நிறுவனங்கள் நஷ்டத்தில் இயங்கியதால் அவர் கடும் பின்னடைவுகளை சந்தித்து வருகிறார்.
தற்போது மோசடி அம்பலமாகி இருக்கும் யெஸ் வங்கியில் அனில் அம்பானி ரூ.14 ஆயிரம் கோடி கடன் வாங்கி இருக்கிறார். இந்த வங்கியின் அதிபர் ராணா கபூர் பல தொழில் அதிபர்களுக்கு அதிக அளவில் கடனை அள்ளி கொடுத்துள்ளார்.
பின்னர் அந்த கடன் வாராக்கடன்களாக மாற்றப்பட்டுள்ளன. இதன் மூலம் அந்த நிறுவனங்களிடம் இருந்து ராணா கபூர் லஞ்சம் பெற்றுள்ளார். அவர் 78 போலி நிறுவனங்களை நடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. லஞ்ச பணம் அந்த நிறுவனங்களுக்கு வந்துள்ளது.
வங்கி கொடுத்த கடன்களில் ரூ.30 ஆயிரம் கோடி வரை வாராக்கடனாக மாற்றப்பட்டிருந்தது. அதற்காக அவர் லஞ்சம் பெற்றிருக்கிறார். பெரும்பாலும் அதிக அளவில் கடன் பெற்றவர்களிடம் இருந்து இவ்வாறு லஞ்ச பணம் பெறப்பட்டிருக்கிறது.
அந்த வகையில் அனில் அம்பானியிடம் இருந்தும் அவர் பணம் பெற்றிருக்கலாம் என்ற சந்தேகம் அமலாக்க பிரிவினருக்கு எழுந்துள்ளது. எனவே அனில் அம்பானி உள்ளிட்ட அதிக அளவில் கடன் வாங்கிய தொழில் அதிபர்களை அழைத்து விசாரிக்க திட்டமிட்டுள்ளனர்.
அதன்படி அனில் அம்பானிக்கு அமலாக்க பிரிவினர் நோட்டீசு அனுப்பி உள்ளனர். அதில் இன்று ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி கூறப்பட்டுள்ளது. அனில் அம்பானி இன்று ஆஜராவா? என்பது தெரியவில்லை. அவரிடம் என்னென்ன கேள்விகள் கேட்கப்படும் என்றும் குறிப்பிடப்பட வில்லை.
ஆனால் அனில் அம்பானி பெயர் இழுக்கப்பட்டதுமே அந்த நிறுவனம் சார்பில் ஒரு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில் நாங்கள் யெஸ் வங்கி விவகாரத்தில் நாங்கள் எந்த முறைகேட்டிலும் ஈடுபடவில்லை. யெஸ் வங்கி அதிபருக்கும், எங்களுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை. நாங்கள் வர்த்தக ரீதியாக முறைப்படி அவர்களிடம் கடன் வாங்கி இருக்கிறோம். இதில் தறவான நடைமுறைகள் எதுவும் கடை பிடிக்கப்படவில்லை என்று கூறப்பட்டிருந்தது.
அனில் அம்பானி மட்டுமல்லாமல் வோடா போன் நிறுவனம், டி.எச்.எப்.எல் ரியல் எஸ்டேட் நிறுவனம், எஸ்.எல். குரூப், சி.ஜி. பவர், ஹாக்ஸ் அன்ட் ஹிங்ஸ், ரேடியஸ் டெவலப்பர், ஐ.எல்.எப்.எஸ். போன்ற நிறுவனங்களும் அதிக அளில் கடன் வாங்கி உள்ளன.
பின்னர் அவர்களுடடைய கடன் பெரும்பாலும் வாராக் கடனாக மாற்றப்பட்டுள்ளது. மொத்தம் அறிவிக்கப்பட்ட ரூ.30 ஆயிரம் கோடி வாரா கடனில் ரூ.20 ஆயிரம் கோடி வரையிலான பணத்தில் முறைகேடு நடந்திருக்கலாம் என்று அமலாக்க பிரிவினர் சந்தேகிக்கின்றனர்.
இந்த வங்கி வழங்கிய மொத்த கடன் ரூ.2 லட்சத்து 20 ஆயிரம் கோடியில் சுமார் ரூ.42 ஆயிரம் கோடி பலவீனமான நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. அந்த நிறுவனங்கள் திவால் அறிவித்துள்ளன. அல்லது செயல்படாத நிலையில் உள்ளன. அதன் மூலமும் முறைகேடு நடந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.
கரோனா வைரஸ் தாக்கம், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிவு உள்பட பல்வேறு காரணங்களால் தங்கத்தின் விலை பிப்ரவரி 18 முதல் உயா்ந்து நாள்தோறும் புதிய உச்சத்தைத் தொட்டது. இதன்பிறகு, தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கமாக இருந்து வந்த நிலையில்,கடந்த சில நாள்களாக விலை குறைந்து வந்தது.
இந்நிலையில்,சென்னையில் திங்கள்கிழமை ஆபரணத் தங்கம் பவுனுக்கு ரூ.72 உயா்ந்து ரூ.31,544-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராமுக்கு ரூ.9 உயா்ந்து, ரூ.3,943-க்கு விற்பனையானது. அதேநேரத்தில், வெள்ளி விலை குறைந்துள்ளது. வெள்ளி கிராமுக்கு ரூ.3.20 குறைந்து, ரூ.40.80 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.3,200 குறைந்து ரூ.40,800 ஆகவும் இருந்தது.
புதுடெல்லி
உணவு பொருட்கள் விலை குறைவால் நாட்டின் சில்லறை விலை பணவீக்கம் கடந்த பிப்ரவரியில், 6.58% ஆக குறைந்துள்ளது. கடந்த சில மாதங்களாக நாட்டில் நிலவி வரும் மந்த நிலைக்கு மத்தியில் விஸ்வரூபம் எடுத்து ஆடி வந்த விலைவாசியால், சில்லறை பணவீக்கமும் தொடர்ந்து அதிகரித்து வந்தது.
சொல்லப்போனால் இது கடந்த ஜனவரியில் 7.59% ஆக இருந்தது. இந்த நிலையில் கடந்த பிப்ரவரியில் விலைவாசி சற்று கட்டுக்குள் வந்தது, குறிப்பாக வெங்காயம் வரத்து, காய்கறிகளின் விலை குறைவு என அனைத்தும் இதற்கு கைகொடுத்தது என்றே கூறலாம்.
இது கடந்த ஜனவரி மாதத்தினை விட குறைந்திருந்தாலும், முந்தைய ஆண்டுகளுடன் ஒப்பிடும்போது இது அதிகம் தான். குறிப்பிட்டு சொல்ல வேண்டுமானால் இந்த விகிதம் கடந்த பிப்ரவரியில் 6.58% ஆக குறைந்துள்ளது. ஆனால் முந்தைய ஆண்டு பிப்ரவரியில், 2.57% ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது. ஆக அந்த விகிதத்தின் படி பார்த்தால் இன்னும் இந்த விகிதம் குறைய வேண்டும்.
இதில் கவனிக்கதக்க விஷயம் என்னவெனில் உணவு பொருட்களின் சில்லறை பணவீக்கம், கடந்த ஜனவரியில், 13.63% ஆக இருந்த நிலையில் பிப்ரவரியில், 10.81% ஆக குறைந்துள்ளது. அதிலும் முந்தைய மாதத்துடன் ஒப்பிடும்போது இந்த விகிதம் குறைந்திருந்தாலும், மத்திய அரசு குறிப்பிட்டதிலிருந்து அதிகரித்துள்ளது.
மத்திய அரசு ரிசர்வ் வங்கியை சில்லரை விலை பணவீக்கத்தை 4% வைத்திருக்கும் படி இலக்கு வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது. தே காய்கறி விலை பணவீக்கம் ஜனவரி மாதத்தில் 50.19% இருந்ததில் இருந்து 31.61% ஆக குறைந்துள்ளது. அதே போல புரதம் நிறைந்த பருப்பு வகைகள் மற்றும் முட்டை வகைகள் விஷயத்திலும் விலை சற்று குறைந்துள்ளது.
எனினும் எரிபொருள் மற்றும் லைட் பிரிவில் பணவீக்கம் முந்தைய மாதத்துடன் ஒப்பிடும்போது கிட்டதட்ட இருமடங்கு அதிகரித்து 6.36% அதிகரித்துள்ளது. இது தான் இப்படி எனில் நுகர்வோர் விலை பணவீக்க வரம்பு தொடர்ந்து மூன்றாவது மாதமாக நிர்ணயித்த 6% இலக்கினை விட அதிகமாகவே உள்ளது. இது ஆகஸ்ட் 2019ல் இருந்து அதிகரித்துக் கொண்டு தான் இருக்கிறது. எனினும் அதிர்ஷ்டவசமாக பிப்ரவரியில் 3.21% ஆக இருந்துள்ளது.
பங்கு சந்தைகளின் தொடர் சரிவு காரணமாக ரிலையன்ஸ் குழுமத்தின் பங்குகள் சரிவைக் கண்டுள்ளன. கடந்த 70 நாட்களில் முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு ஒரு லட்சத்து 11 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு சரிந்துள்ளது. ரிலையன்ஸ் நிறுவன பங்குகள் நடப்பாண்டில் மட்டும் 28 சதவீதம் அளவுக்கு சரிவை கண்டுள்ளன. இன்றைய வர்த்தகத்தில் மட்டும் 9 சதவீதம் அளவுக்கு பங்கு மதிப்பு சரிவடைந்துள்ளது.
யெஸ் பேங்க் நிறுவனத்தின் 7250 கோடி பங்குகளை வாங்குவதற்கு கடன் வழங்குநர் குழு ஒப்புதல் அளித்துள்ளதாக எஸ்பிஐ வங்கி தெரிவித்துள்ளது.
நாட்டின் மிகப் பெரிய கடன் வழங்குநரான ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (SBI) 725 கோடி யெஸ் வங்கி பங்குகளை ரூ .10 விலையில் வாங்குவதற்கான திட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது. ரிசர்வ் வங்கி சிக்கலான யெஸ் வங்கியை நிறுத்தி யெஸ் வங்கிக்கான வரைவு மறூசீரமைப்பு திட்டத்தை கொண்டு வந்தது.
இந்த நிலையில், ஏப்ரல் 3 வரை அதன் கணக்குகளில் இருந்து திரும்பப் பெறுவதை தடைசெய்த சில நாட்களுக்குப் பிறகு இந்த முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.இன்றைய சந்தை நேரங்களுக்குப் பிறகு BSE ஒழுங்குமுறை தாக்கல் செய்ததில், நடைபெற்ற கூட்டத்தை தொடர்ந்து எஸ்பிஐ-ன் இந்த முடிவை அதன் மத்திய வாரியத்தின் நிர்வாகக் குழு அங்கீகரித்ததாகக் கூறியுள்ளது.
சென்னையில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 4 ஆம் தேதி தங்கம் விலை ஒரு பவுன் ரூ.30 ஆயிரத்தை கடந்து வரலாறு காணாத உச்சமடைந்தது. அப்போது ஒரு பவுன் ரூ.30 ஆயிரத்து 104க்கு விற்பனை ஆனது. அதன் பிறகு, சற்று விலை குறைய தொடங்கி, ஒரு பவுன் ரூ.28 ஆயிரம் முதல் ரூ.29 ஆயிரத்துக்குள் விற்பனை செய்யப்பட்டு வந்தது.
ஆனால், புது வருடம் பிறந்த பின் தங்கம் விலை தொடர்ந்து உயர தொடங்கியது. கடந்த ஜனவரி 1ந்தேதி ஒரு கிராம் ரூ.3 ஆயிரத்து 735க்கும், ஒரு பவுன் ரூ.29 ஆயிரத்து 880க்கும் விற்பனை ஆனது. கடந்த ஜனவரி 3 ஆம் தேதி மாலை நேர நிலவரப்படி, கிராமுக்கு ரூ.80ம், பவுனுக்கு ரூ.640ம் அதிகரித்து, ஒரு கிராம் ரூ.3 ஆயிரத்து 815க்கும், ஒரு பவுன் ரூ.30 ஆயிரத்து 520க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இதனால் தங்கம் விலை கடந்த செப்டம்பருக்கு பின் பவுன் ஒன்றுக்கு மீண்டும் ரூ.30 ஆயிரத்தை கடந்து, புதிய வரலாறு படைத்தது. கடந்த ஜனவரி 8ந்தேதி விலை உயர்ந்து ரூ.31 ஆயிரத்து 432க்கு விற்பனை செய்யப்பட்டது.
இதன்பின் ஜனவரி 14 ஆம் தேதி இதன் விலை சற்றே குறைந்து ரூ.30 ஆயிரத்து 112க்கு விற்பனையானது. பின்பு தொடர்ந்து விலை உயர்ந்து கொண்டே சென்றது. இதன்படி, கடந்த பிப்ரவரி 8ந்தேதி ரூ.31 ஆயிரத்து 184க்கும், பிப்ரவரி 15 ஆம் தேதி ரூ.31 ஆயிரத்து 392க்கும், பிப்ரவரி 20ந்தேதி ரூ.31 ஆயிரத்து 840க்கும், பிப்ரவரி 21ந்தேதி ரூ.32 ஆயிரத்து 96க்கும் பிப்ரவரி 22 ஆம் தேதி ரூ.32 ஆயிரத்து 576க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இதன்பின்னர் பிப்ரவரி 24 ஆம் தேதி ரூ.33 ஆயிரத்து 328 ஆக விற்பனையானது. இதனால் தங்கம் விலை மீண்டும் புதிய உச்சம் தொட்டது. சென்னையில் தங்கத்தின் விலை கடந்த பிப்ரவரி 29ந்தேதி பவுன் ஒன்றுக்கு ரூ.624 குறைந்து ரூ.31 ஆயிரத்து 888க்கு விற்பனை செய்யப்பட்டது.
இதன்பின்னர் தங்கம் விலை கடந்த 2ந்தேதி ஒரு பவுன் ரூ.32 ஆயிரத்து 40 ஆக இருந்தது. பின் கடந்த 3ந்தேதி, தங்கம் விலை பவுனுக்கு ரூ.72 உயர்ந்து ரூ.32 ஆயிரத்து 112 ஆக விற்பனை செய்யப்பட்டது. இதேபோன்று கிராம் ஒன்று ரூ.4 ஆயிரத்து 14 ஆகவும் விற்பனையானது. பின்னர் இந்த விலை மீண்டும் உயர்ந்து பவுன் ஒன்றுக்கு ரூ.32 ஆயிரத்து 200 ஆக இருந்தது.
இந்நிலையில், தங்கம் விலை கடந்த 4ந்தேதி ஒரே நாளில் பவுனுக்கு 1,024 ரூபாய் அதிகரித்து ரூ.33 ஆயிரத்து 224 ஆக விற்பனையானது. இதேபோன்று ஒரு கிராம் ரூ.4 ஆயிரத்து 153 ஆக இருந்தது. இதனால் தங்கம் வாங்க காத்திருந்தவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், சென்னையில் ஒரு கிராம் தங்கம் நேற்றைய விலையை விட ரூ.50 குறைந்து ரூ.4,164க்கும், பவுனுக்கு ரூ.400 குறைந்து ரூ.33,312க்கும் இன்று விற்பனை செய்யப்படுகிறது. இதேபோன்று வெள்ளியின் விலை கிராம் ஒன்றுக்கு 80 காசுகள் குறைந்து ரூ.49.50க்கு விற்பனை செய்யப்படுகிறது.
'ஒபெக்' கூட்டமைப்பு மற்றும் ரஷ்யா இடையே நடைபெற்ற கச்சா எண்ணெய் உற்பத்தி தொடா்பான பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. கச்சா எண்ணெய் உற்பத்தியை அதிகரித்து அதன் விலையை குறைக்கப் போவதாக ரஷ்யா தன்னிச்சையாக அறிவித்தது. இது, சா்வதேச சந்தையில் குழப்பமான சூழ்நிலையை ஏற்படுத்தியுள்ளது.
இதனிடையே கடந்த திங்கள்கிழமை பங்குச் சந்தையில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகளின் மதிப்பு 12 சதவீதம் சரிந்தது. இதனால், முகேஷ் அம்பானியின் நிகர சொத்து மதிப்பு 580 கோடி டாலா் குறைந்தது. இதையடுத்து, அவா் ஆசிய பணக்காரா்கள் பட்டியிலில் இரண்டாவது இடத்துக்கு தள்ளப்பட்டார். அம்பானியை விட 260 கோடி டாலா் கூடுதல் சொத்து மதிப்பைக் கொண்டு 4,450 கோடி டாலா் செல்வ வளத்துடன் அலிபாபா நிறுவனா் ஜாக் மா முதலிடத்துக்கு முன்னேறியுள்ளார் என்று ப்ளூம்பொ்க் தெரிவித்துள்ளது.
இருப்பினும் அம்பானிக்கு ஏற்பட்டுள்ள இந்த பின்னடைவு தற்காலிகமானதே. ஏனெனில், அவா் மிகவும் வலுவான வா்த்தக கட்டமைப்புகளை உருவாக்கிக் கொண்டுள்ளாா். இதைத் தவிர, அவரது தொலைத் தொடா்பு வா்த்தகமும் நல்ல முன்னேற்றம் கண்டு லாபம் கொழிக்கத் தொடங்கியுள்ளது. இதுபோன்ற காரணங்களால், ஆசிய பணக்காரா் பட்டியலில் முதலிடத்தை அவர் விரைவில் மீண்டும் பிடிப்பாா் என்று அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
கோழியில் இருந்துதான் கொரோனா வைரஸ் பரவுவதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவி வருகின்றன. இந்த செய்திகளால் பீதியடைந்த மக்கள் கோழி வாங்குவதை வெகுவாக குறைத்ததால் விற்பனை பாதியாகக் குறைந்துள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரத்தில் கடந்த மாதம் 200 ரூபாய் வரை விற்கப்பட்ட கறிக்கோழி விலை இந்த வாரம் 100 ரூபாயாக குறைந்துள்ளது. உயிருடன் கோழி 70 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. கோழிக்கறி வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு 4 முட்டை இலவசமாக வழங்கப்படும் என்று அதிரடி ஆஃபர்களை வெளியிட்ட போதும் வாங்குவதற்கு ஆட்கள் வருவதில்லை என வியாபாரிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.
நெல்லையிலும் கொரோனா மற்றும் பறவைக் காய்ச்சல் அச்சத்தால் கோழிக்கறி வாங்குவதை மக்கள் தவிர்த்து வருகின்றனர். அதிக விலை கொடுத்து வாங்கிய கோழிகளை குறைந்த விலைக்கு விற்க வேண்டிய சூழலுக்கு கறிக்கடைக்காரர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.இதனால் ஏற்பட்ட நஷ்டம் ஒருபக்கம் என்றால், விற்பனையாகாத கோழிகளை பராமரிக்க கூடுதல் செலவும் ஆவதால் என்ன செய்வதென தெரியாமல் உள்ளனர்.
புதுடெல்லி
ஜனவரி மாத விற்பனை அடிப்படையில் அமைந்த டாப் 10 கார்கள் பட்டியலில் மாருதி சுசுகியின் 7 மாடல்கள் இடம் பெற்றுள்ளன. இந்தப் பட்டியலில் மாருதி டிசையர் முதலிடத்தில் இருக்கிறது.
இந்திய மோட்டார் வாகன தயாரிப்பாளர்கள் சங்கம் வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்கள் வருமாறு:
மாருதி சுசுகி நிறுவனம் கடந்த ஜனவரி மாதத்தில் மொத்தம் 22,406 டிசையர் கார்களை விற்பனை செய்து இருக்கிறது. கடந்த ஆண்டின் இதே மாதத்தில் அது 19,073-ஆக இருந்தது. டாப் 10 கார்கள் பட்டியலில் இது முதல் இடத்தில் உள்ளது.
மாருதி பேலினோ விற்பனை 23 சதவீதம் அதிகரித்து (16,717-ல் இருந்து) 20,485 கார்களாக உயர்ந்து இருக்கிறது. இது இரண்டாவது இடத்திற்கு முன்னேறி இருக்கிறது. மாருதி சுவிப்ட் 3-வது இடத்தில் நீடிக்கிறது. இந்தக் கார் விற்பனை 19,981-ஆக இருக்கிறது. சென்ற ஆண்டின் இதே மாதத்தில் அது 19,795 கார்களாக இருந்தது.
மாருதி ஆல்டோ விற்பனை 18,914-ஆக குறைந்து இருக்கிறது. கடந்த ஆண்டின் இதே மாதத்தில் அது 23,360-ஆக இருந்தது. இது நான்காவது இடத்திற்கு சென்றுள்ளது. மாருதி வேகன் ஆர் 9-வது இடத்தில் இருந்து ஐந்தாவது இடத்திற்கு முன்னேறி உள்ளது. இந்தக் கார் விற்பனை (10,048-ல் இருந்து) 15,232-ஆக உயர்ந்துள்ளது.
கியா செல்டாஸ் கார் விற்பனை 15,000-ஆக இருக் கிறது. இந்த கார் ஆறாவது இடத்தில் இருக்கிறது. மாருதியின் ஈக்கோ விற்பனை 12,324-ஆக இருக்கிறது. இந்த கார் ஏழாவது இடத்திற்கு வந்து இருக்கிறது. மாருதியின் விதாரா பிரெஸ்ஸா விற்பனை 10,134-ஆக உள்ளது. இந்த கார் 8-வது இடத்திற்கு சென்றுள்ளது.
ஹூண்டாய் மோட்டார் நிறுவனத்தின் கிராண்டு ஐ10 கார் விற்பனை 8,774-ஆக உள்ளது. இது டாப் 10 பட்டியலில் ஒன்பதாவது இடத்திற்கு சென்றுள்ளது. கடந்த ஆண்டின் இதே மாதத்தில் இது 8-வது இடத்தில் இருந்தது. இந்நிறுவனத்தின் எலைட் ஐ20 கார்கள் விற்பனை (11,749-ல் இருந்து) 8,137-ஆக குறைந்து இருக்கிறது. இந்தக் கார் 10 இடத்தில் இருக்கிறது. இவ்வாறு புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.
2019 ஆம் ஆண்டு விற்பனை அடிப்படையில் டாப் 10 கார்கள் பட்டிய லில் மாருதி சுசுகியின் 7 மாடல்கள் உள்ளன. அதில் மாருதி ஆல்டோ முதலிடத்தில் இருக்கிறது. கடந்த 2019 ஆம் ஆண்டில் மொத்தம் 2.08 லட்சம் ஆல்டோ கார்கள் விற்பனை ஆகி இருக்கிறது. முந்தைய ஆண்டில் அது 2.56 லட்சமாக இருந்தது.
வாராக்கடன் அதிகரித்தால் தனியார் வங்கியான ‘Yes Bank’ கடுமையான நிதிச்சிக்கலில் தவித்து வந்த நிலையில் அதன் நிர்வாகம் முழுவதும் ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. எஸ் பேங்க்கினை நிர்வகிக்க எஸ்.பி.ஐ வங்கியின் முன்னாள் அலுலரான பிரசாந்த் குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து, ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியது:
தனியார் வங்கியான ‘எஸ் பேங்க்’ ரிசர்வ் வங்கியின் முழு கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது. கடன்சுமையில் இருந்து மீட்டெடுக்கும் பொருட்டு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது. எஸ் பேங்க்கின் நிர்வாகக் குழு முழுமையாக ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்படுகிறது. வங்கியில் வைப்புத்தொகை வைத்திருப்பவர்கள் அதிலிருந்து ரூ. 50,000 வரையே எடுக்க அனுமதிக்கப்படுவார்கள்.
மருத்துவம் மற்றும் திருமணம் உள்ளிட்ட அவசர தேவைக்களுக்கு 50 ஆயிரத்துக்கு மேல் பணம் எடுக்க வேண்டுமென்றால் வங்கி மேலாளரிடம் தெரிவித்து அவரது அனுமதியுடன் பணத்தை பெற்றுக்கொள்ளாம். வாடிக்கையாளர்களின் நன்மதிப்பை பெறும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இந்த அறிவிப்பானது உடனடியாக அமலுக்கு வருகிறது என்றார்.