கொரோனா வைரஸ் தொற்றியவர்கள் வெளிநாடுகளில் இருந்து படகுகள் மூலம் இரகசியமாக இலங்கைக்குள் பிரவேசிக்கும் ஆபத்து இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. புலனாய்வுப் பிரிவினர் இதை அறிவித்துள்ளதாக சிங்கள இணையதளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இதன் காரணமாக சந்தேகத்திற்குரிய படகுகள் குறித்து உன்னிப்பாக கண்காணிக்கும் நோக்கில் கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் வரையான கடற் பிராந்தியத்தை அடிப்படையாக கொண்டு விமானப்படையினர் வான் வழி கண்காணிப்பை ஆரம்பித்துள்ளனர்.
இவ்விதமாக இந்தியாவில் இருந்து கொரோனா நோயாளிகள் வரும் வாய்ப்பு அதிகம் இருப்பதாக புலனாய்வுப் பிரிவினர் கூறியுள்ளனர். அதேவேளை கடற்படையினர் நாட்டை சுற்றியுள்ள கடற்பரப்பின் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளதுடன் கண்காணிப்புகளையும் அதிகரித்துள்ளனர்.
இலங்கையில் சிங்களர்கள் தமிழில் தேசிய கீதம் பாடியதால் பரபரப்பு ஏற்பட்டது. அந்நாட்டில் 72வது சுதந்திர தினத்தையொட்டி சிங்கள மொழியில் மட்டுமே தேசிய கீதம் பாட வேண்டும் என அதிபர் கோத்தபய ராஜபக்சே உத்தரவிட்டிருந்தார். இந்நிலையில் விடுதலை இயக்கம் என்ற அமைப்பை சேர்ந்தவர்கள் கொழும்புவில் ஒன்று கூடி இலங்கை தேசிய கீதத்தை தமிழில் பாடினர். அதிபர் தேர்தலில் போட்டியிட்ட சிறிதுங்க ஜயசூரிய உள்ளிட்ட பலரும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
இலங்கையில் சிங்கள மொழியில் மட்டுமே தேசிய கீதம் பாட வேண்டும் என்ற அரசாங்கத்தின் கோரிக்கையை ஏற்றுக்கொள்ள முடியாது என்று வடக்கு மாகாண சபை அவைத்தலைவர் சிவஞானம் தெரிவித்துள்ளார்.
கொழும்புவில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இனநல்லிணத்தை ஏற்படுத்தும் வகையில், இலங்கையில், தேசிய கீதம், சிங்களம் மற்றும் தமிழில் பாடப்பட்டு வந்ததாக கூறினார். இந்த நிலையில் தற்போதைய அரசு, பழிவாங்கும் நோக்கத்தோடு, இதை மாற்ற முயற்சிப்பதாக கூறியுள்ளார். அதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் சிவஞானம் தெரிவித்துள்ளார்.
கொழும்பு
இலங்கையின் புதிய பிரதமராக மகிந்த ராஜபக்சே இன்று பதவியேற்றார்.
இலங்கை அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றார் கோத்தபாய ராஜபக்சே. இதனையடுத்து மக்களின் தீர்ப்புக்கு மதிப்பளித்து தமது பதவியை ராஜினாமா செய்வதாக பிரதமராக இருந்த ரணில் விக்கிரமசிங்கே அறிவித்தார்.
இதனையடுத்து இலங்கையின் புதிய பிரதமராக பதவியேற்க வருமாறு எதிர்க்கட்சித் தலைவரான மகிந்த ராஜபக்சேவை, கோத்தபாய அழைத்திருந்தார். இந்நிலையில் இன்று முற்பகல் கோத்தபாய ராஜபக்சேவை நேரில் சந்தித்து தமது பதவி விலகல் கடிதத்தை ரணில் கொடுத்தார்.
இதன்பின்னர் இலங்கையின் புதிய பிரதமராக மகிந்த ராஜபக்சே பதவி ஏற்றார். இலங்கையின் பிரதமராக 3-வது முறையாக மகிந்த ராஜபக்சே பதவியேற்றுள்ளார்.
இலங்கையின் புதிய பிரதமராக பதவியேற்ற மகிந்த ராஜபக்சேவுக்கு பிரதமர் மோடி வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். இதற்கு மகிந்த ராஜபக்சேவும் நன்றி தெரிவித்துள்ளார்.
கொழும்பு
இலங்கையின் புதிய அதிபராக கோத்தபய ராஜபக்சே இரண்டு நாட்களுக்கு முன் பதவி ஏற்றார். இந்நிலையில் இலங்கைக்கு திடீர் பயணம் மேற்கொண்ட இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், கொழும்புவில் அங்கு தலைவர்களுடன் சந்திப்பு நடத்தினார். கோத்தபய ராஜபக்சேவை நேற்று சந்தித்துப் பேசினார். இரண்டு நாட்டு உறவுகள் குறித்து இவர்கள் சுமார் 1 மணி நேரம் பேசினார்கள். இலங்கையின் அரசியல் சூழ்நிலை குறித்து இவர்கள் தீவிரமாக நீண்ட நேரம் பேசினார்கள். அதன்பின் பிரதமர் மோடியின் சார்பில் இந்தியாவுக்கு வருமாறு அழைப்பு விடுத்தார். இதனை கோத்தபய ராஜபக்சே ஏற்றுக் கொண்டார்.
இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே அடுத்த வாரம் 29ம் தேதி இந்தியா வருகிறார். இந்தியா வரும் கோத்தபய ராஜபக்சே பிரதமர் மோடியை சந்திக்க உள்ளார்.
இலங்கையின் 8-வது ஜனாதிபதியை தேர்வு செய்வதற்கான தேர்தல் நாளை (சனிக்கிழமை) நடைபெறவுள்ள நிலையில், அதற்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணைக்குழு செய்து வருகிறது.
இதன்படி, நாடு முழுவதும் ஸ்தாபிக்கப்பட்டுள்ள வாக்கெடுப்பு நிலையங்களுக்கு வாக்கு பெட்டிகள் தற்போது கொண்டு செல்லப்படுகின்றன. நாடு முழுவதும் 12,845 வாக்கெடுப்பு நிலையங்களில் இந்த முறை ஜனாதிபதி தேர்தல் வாக்களிப்பு நடைபெறவுள்ளது.
முதல் முறையாக கார்டு போர்டுகளினாலான வாக்கு பெட்டிகள் தயாரிக்கப்பட்டுள்ள இந்த தேர்தலில் சுமார் மூன்று லட்சம் அரசாங்க அதிகாரிகள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். சனிக்கிழமை காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை மக்கள் வாக்களிப்பர். இதற்கு முன்னர் நடைபெற்ற தேர்தல்களின் போது காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரை மட்டுமே வாக்கெடுப்பு நடைபெற்றது.
இந்த முறை வாக்குச்சீட்டு பெரிதாக உள்ளதால், வாக்களிப்பு ஒரு மணிநேரம் அதிகரிக்கப்பட்டுள்ளது. வாக்காளர்களுக்கு சின்னத்தை அடையாளம் கண்டுக் கொள்ள அதிக நேரம் தேவைப்படுவதை கருத்தில் கொண்டே நேரம் அளிக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
ஜனாதிபதி தேர்தலுக்காக இந்த முறை 60,175 போலீஸ் உத்தியோகத்தர்களும், 8,080 சிவில் பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகளும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அத்துடன், தேவை ஏற்பட்டால் இராணுவ பாதுகாப்பும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, வாக்களிப்புக்காக தமது சொந்த பிரதேசங்களை நோக்கி பயணிக்கும் வாக்காளர்களுக்கான சிறப்பு போக்குவரத்து சேவைகள் வழங்கப்பட்டுள்ளன. இதன்படி, இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான 5,800 பேருந்துகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவிக்கின்றது. கொழும்பிலிருந்து வெளி மாவட்டங்களுக்கு செல்லும் பயணிகளின் வசதி கருதி, சுமார் 1,500 பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
மக்கள் வாக்களிக்கும்போது முகத்தை மறைக்கும் விதத்தில் ஆடைகளோ அல்லது மூக்கு கண்ணாடியோ அணிந்திருந்தால், அடையாளத்தை உறுதி செய்துக் கொள்வதற்காக அவற்றை அப்புறப்படுத்தும் அதிகாரம், தேர்தல் கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ள அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசபிரிய தெரிவித்துள்ளார்.
அடையாளம் உறுதிப்படுத்தப்பட்ட பின்னர், வாக்களிப்பு நிலையத்திலுள்ள இரண்டாவது அதிகாரி வாக்காளரின் பெயரை கூறியதன் பின்னர் சிறிது நேரத்தின் பின்னரே முகத்தை மூடும் வகையிலான ஆடையை மீண்டும் அணிய சந்தர்ப்பம் வழங்கப்படும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். வாக்களிப்பு நிலையங்களிலுள்ள அதிகாரிகளுக்கு வாக்காளர் மீது சந்தேகத்தை தோன்றக்கூடாது என்பதற்காகவே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
தேர்தல் அதிகாரி மற்றும் தேர்தல் ஆணைக்குழுவின் அனுமதியில்லாத ஒருவருக்கு வாக்குச்சாவடிக்குள் புகைப்படம் அல்லது வீடியோ எடுப்பதும் முற்றாக தடை செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார். வாக்குச்சாவடிக்குள் தேர்தல் அதிகாரி அல்லது அவரது அனுமதியை பெற்றவர்களுக்கு மாத்திரமே தொலைபேசியை பயன்படுத்த முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், சமூக வலைத்தளங்களில் போலியாக பிரசாரங்கள், வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்யும் வகையிலான பிரசாரங்கள், இனங்களுக்கு இடையிலான நல்லுறவை பாதிக்கும் வகையிலான பிரசாரங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தமக்கு தொடர்ந்தும் புகார்கள் கிடைக்கப்பெற்று வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.
இவ்வாறான போலி பிரசாரங்கள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் பட்சத்தில், சமூக வலைத்தளங்களை முடக்க வேண்டிய நிலைமை ஏற்படக்கூடும் என தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசபிரிய கூறியுள்ளார்.
யாழ்ப்பாணம்
இலங்கை விவசாய அமைச்சகத்தின் சார்பில் ஒரு வார விவசாய கண்காட்சி நடைபெறுகிறது. இதில் பல துறைகளைச் சார்ந்த நிறுவனங்கள் கடைகள் அமைத்துள்ளன. இலங்கை "பனை அபிவிருத்தி சபை" சார்பாக அமைக்கப்பட்டுள்ள ஸ்டால்கள் மக்களை மிகவும் கவர்ந்தவைகளில் ஒன்று. பனை மரத்தின் பயன்பாடுகளை மக்களுக்கு தெள்ளத்தெளிவாக எடுத்துரைப்பதாக அமைந்துள்ளது.
The Big Oxmox advised her not to do so, because there were thousands of bad Commas, wild Question but the Text didn’t listen her seven versalia, put her initial into.
Pityful a rethoric question ran over her cheek When she reached the first hills of the Italic Mountains, she had a last view back on the skyline of her hometown Bookmarksgrove, the headline of Alphabet Village and the subline of her own road, the Line Lane.