Print this page

பெண்கள் டி20 உலக கோப்பை கிரிக்கெட் - இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேற்றம் Featured

மெல்போர்ன்

பெண்கள் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது.  இதில்,  குரூப் - ஏ பிரிவில் இன்று நடைபெற்ற  9 வது லீக் ஆட்டத்தில் இந்தியாவும் நியூசிலாந்தும் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்து வீசத்தொடங்கியது.

இதன்படி, முதலில் பேட்டிங்கை துவங்கிய இந்திய அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 133 ரன்கள் சேர்த்தது.  இதையடுத்து, 134 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து அணி பேட்டிங் செய்தது. நிர்ணயிக்கப்பட்ட 20 ஒவர்களில் நியூசிலாந்து அணி 6 விக்கெட் இழப்புக்கு 129 ரன்கள் மட்டுமே எடுத்தது.  

இதன் மூலம் இந்திய மகளிர் கிரிக்கெட் அணி 3 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை ருசித்தது.  இந்த வெற்றியின் மூலம், இந்திய மகளிர் கிரிக்கெட் அணி , உலக கோப்பை அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது.
 
 
 
 
 
Rate this item
(0 votes)
Super User

Selfies labore, leggings cupidatat sunt taxidermy umami fanny pack typewriter hoodie art party voluptate. Listicle meditation paleo, drinking vinegar sint direct trade.

www.themewinter.com

Latest from Super User