Print this page

அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு பின் இந்தியாவுடன் மிகப்பெரிய வர்த்தக ஒப்பந்தம் - டிரம்ப் Featured

வாஷிங்டன்

டிரம்ப் அடுத்த வாரம், 2 நாள் பயணமாக இந்தியா வர உள்ளார். இந்நிலையில் இது தொடர்பாக செய்தியாளர்களிடம் டிரம்ப் பேசியது:

இந்தியாவுடன் வர்த்தக ஒப்பந்தம் ஏற்கனவே மேற்கொண்டுள்ளோம். இருப்பினும் தேர்தலுக்கு முன் இந்தியாவுடன் மிகப் பெரிய ஒப்பந்தம் மேற்கொள்ளப்படாது. ஒருவேளை தேர்தலுக்கு பிறகு மேற்கொள்ளப்படுமா என்பது பற்றி எனக்கு தெரியாது.

ஆமதாபாத்தில் என்னை வரவேற்பதற்காக விமான நிலையம் முதல் மைதானம் வரை 7 லட்சம் பேரை நிறுத்த உள்ளனர். எனக்கு மோடியை மிகவும் பிடிக்கும். உலகின் மிகப் பெரிய மைதானம் திறக்கப்பட உள்ளது. இதில் கலந்து கொள்ள மிகவும் ஆர்வமாக உள்ளேன் என்றார்.

பிப் 24 ஆம் தேதி பிற்பகல் குஜராத்தின் ஆமதாபாத் நகருக்கு வரும் டிரம்ப், மைதான திறப்பு விழாவில் கலந்து கொள்ள உள்ளார். தொடர்ந்து சபர்மதியில் உள்ள காந்தி ஆசிரமத்திற்கும் அவர் செல்ல உள்ளார். அன்று மாலை டில்லி வரும் அவருக்கு ஜனாதிபதி மாளிகையில் பிரம்மாண்ட வரவேற்பு அளிக்கப்பட உள்ளது.

Rate this item
(0 votes)
Super User

Selfies labore, leggings cupidatat sunt taxidermy umami fanny pack typewriter hoodie art party voluptate. Listicle meditation paleo, drinking vinegar sint direct trade.

www.themewinter.com

Latest from Super User