இஸ்லாமாபாத்
தெற்காசிய நாடான ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த அகதிகள், 40 ஆண்டுகளுக்கும் மேலாக பாகிஸ்தானில் வசிக்க, அனுமதி அளிக்கப்பட்டதை குறிக்கும் வகையில், இரண்டு நாள் அகதிகள் மாநாட்டுக்கு, பாகிஸ்தான் அரசு ஏற்பாடு செய்திருந்தது. இதில், ஐ.நா பொதுச்செயலர் அன்டோனியோ குட்டரெஸ் கலந்து கொண்டார்.
நிகழ்ச்சியில், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் பேசியதாவது:
பாகிஸ்தானை அழித்து ஒழிக்க, இந்திய ராணுவத்துக்கு, 11 நாட்கள் போதும் என, அந்நாட்டு பிரதமர் நரேந்திர மோடி, சமீபத்தில் பேசினார். மக்கள் தொகை அதிகம் கொண்ட, அணு ஆயுதம் வைத்துள்ள ஒரு நாட்டின் பிரதமர், இப்படி பொறுப்பற்ற முறையில் பேசக் கூடாது.
ஹிந்துத்வா கொள்கையால், ஜம்மு - காஷ்மீர் மக்களின் வாழ்க்கை, 200 நாட்களுக்கும் மேலாக முடங்கிக் கிடக்கிறது. இதே கொள்கையால், இந்தியாவில் வசிக்கும், 20 கோடி முஸ்லிம்களுக்கு எதிரான, பாரபட்சமான இரண்டு சட்டங்களை, பா.ஜ.க அரசு வகுத்துள்ளது.
இந்தியாவின் இது போன்ற கொள்கை முடிவுகளை, சர்வதேச சமூகங்கள் கவனிக்க தவறினால், அங்கு வசிக்கும் முஸ்லிம்கள், பாகிஸ்தானை நோக்கி நகரத் துவங்குவர். இது, பாகிஸ்தானில் மீண்டும் அகதிகள் பிரச்சனையை உருவாக்கும். தற்போது இருப்பது, நேரு அல்லது மஹாத்மா காந்தியின் இந்தியா கிடையாது.
எனவே, ஐ.நா இந்த பிரச்சனையில் உடனடியாக தலையிடுவது அவசியம். இல்லையெனில், எதிர்காலத்தில் இது மிகப் பெரிய பிரச்சனையாக உருவெடுக்கும். பயங்கரவாதிகளின் புகலிடமாக, பாகிஸ்தான் இனியும் இருக்காது. அவர்களுக்கு இங்கு இடமில்லை. இவ்வாறு, அவர் பேசினார்.
Selfies labore, leggings cupidatat sunt taxidermy umami fanny pack typewriter hoodie art party voluptate. Listicle meditation paleo, drinking vinegar sint direct trade.
www.themewinter.com