Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
Reload Captcha
சினிமா

சினிமா (54)

நடிகர் விஜய் நடித்துள்ள ‘மாஸ்டர்’ படக்குழு ரிலீஸ் தேதியை இதுவரை அதிகாரபூர்வமாக அறிவிக்காமல், ஏப்ரல் 2020 என்றே மறைமுகமாக அனைத்து போஸ்டர்களிலும் தெரிவித்து வந்தது. ஆனால், ஏப்ரல் 9ஆம் தேதி ரிலீஸ் என்றும் கூறப்பட்டது. ஆனால் கொரோனா பாதிப்பு காரணமாக தமிழகத்தின் எல்லையோர மாவட்டங்களில் உள்ள திரையரங்குகள் இம்மாதம் 31ஆம் தேதி வரை மூடப்பட்டுள்ளன.

அதேபோல், தமிழகத்தின் அண்டை மாநிலங்களான கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானாவிலும் திரையரங்குகள் மூடப்பட்டுள்ளன. தமிழகம் மட்டுமின்றி, அண்டை மாநிலங்களிலும் விஜய் படத்துக்கு மிகப்பெரிய வரவேற்பும் வசூலும் கிடைக்கும் என்பதால், அங்கும் திரையரங்குகள் திறக்கப்படும் வரை மாஸ்டர் படம் வெளியாகாது என்ற சூழல் உருவாகியுள்ள நிலையில் தற்போது மாஸ்டர் படக்குழுவினர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

மாஸ்டர் திரைப்படம், திட்டமிட்டபடி வெளியாகும். ஏப்ரல் 9-ம் தேதிக்குள் கொரோனா பாதிப்பின் நிலைமை சீராகும் என நம்பிக்கை தெரிவித்துள்ள படக்குழுவினர், வீட்டுக்குள் முடங்கியுள்ள மக்களை திரையரங்கிற்கு அழைத்துவரும் படமாக மாஸ்டர் இருக்கும் எனத் தெரிவித்துள்ளனர்.

 
 

கடந்த 2017 ஆம் ஆண்டு மிஷ்கின் இயக்கத்தில் விஷால் மற்றும் பிரசன்ன நடிப்பில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற படம் தான் துப்பறிவாளன். அந்த படத்தின் வெற்றியை அடுத்து இந்த படத்தின் இரண்டாம் பாகம் எடுக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வந்தது. இந்த படத்திற்கான படப்பிடிப்பு லண்டனில் படமாக்கப்பட்டு வந்த நிலையில் இந்த திரைப்படத்தின் இயக்குநர் பொறுப்பிலிருந்து மிஷ்கின் விடுவிக்கப்பட்டுள்ளார் என்று ஒரு தகவல் வெளியானது.

அதன் பிறகு, விஷால் தயாரித்து நடித்து வந்த இந்த திரைப்படத்தின் தயாரிப்பு செலவு திட்டமிட்டதை விட அதிகமானதால் மிஷ்கின் படத்திலிருந்து விடுவிக்கப்பட்டு உள்ளதாகத் அதிகாரப்பூர்வ தகவல் வெளியானது. . எஞ்சியுள்ள திரைப்படத்தை நடிகர் விஷாலே இயக்குவார் என்று எதிர்பார்க்கப்படுவதாகத் தகவல்கள் வெளியாகின, இந்நிலையில் இந்த படத்தின் First Look வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்போதுநடிகர் விஷாலின் விஷால் பிலிம் பாக்டரிக்கு இயக்குநர் மிஷ்கின் ஒரு கடிதத்தை எழுதியுள்ளார். அதில் 15நிபந்தனைகளையும் அவர் வைத்துள்ளார்.
1. தனக்கு சம்பளமாக ஜி.எஸ்.டி வரியை சேர்த்து சுமார் 5 கோடி தரவேண்டும்.
2. லொகேஷன் எனப்படும் படத்திற்கான படப்பிடிப்பு இடங்களை முடிவு செய்யும் எல்லா உரிமையும் இயக்குநருக்கு தான் உண்டு மற்றவர்கள் யாரும் இதில் தலையிடக்கூடாது.
3. இயக்குநரிடம் தற்போது இந்தி ரீமேக் உரிமை மட்டுமே உள்ளது. ஆகவே இதில் தயாரிப்பாளருக்கு எந்தவித உரிமையும் இல்லை.
4. இந்த படத்தை குறித்த எல்லா தகவல்களும் மின்னஞ்சல் மூலமாக மட்டுமே இருக்கும் என்பன உள்ளிட்ட 15 நிபந்தனைகளை அவர் வெளியிட்டுள்ளார்.

விஜய்யின் மாஸ்டர் படத்தில் இருந்து இரண்டாவது பாடல் 'வாத்தி கமிங் ஒத்து' பாடல் நேற்று வெளியிடப்பட்டது. அந்த வீடியோ தற்போது youtube தளத்தில் ட்ரெண்டிங்கில் முதலிடத்தில் உள்ளது. தற்போது வரை அந்த விடியோவுக்கு 5.3 மில்லியன் பார்வைகள் கிடைத்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகம் பார்க்கப்பட்ட பாடல்கள் பட்டியலில் வாத்தி கமிங் பாடல் உலக அளவில் 7வது இடத்தை பிடித்துள்ளது. இதை விஜய் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கொண்டாடி வருகின்றனர். மாஸ்டர் படத்தின் முதல் பாடல் குட்டி ஸ்டோரி வெளியானபோது அது உலக அளவில் மூன்றாவது இடம் பிடித்து சாதனை செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள மாஸ்டர் படம் வரும் ஏப்ரல் 9ம் தேதி திரைக்கு வருகிறது. வரும் ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 15ம் தேதி) இசை வெளியீட்டு விழா நடைபெற உள்ளது. கொரோனா அச்சம் காரணமாக ரசிகர்கள் அதிகம் கூடுவதை தவிர்க்க இசை வெளியீட்டு விழா 5 நட்சத்திர ஹோட்டலில் நடத்தப்படுகிறது. அது டிவியில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படவுள்ளது.

இந்த விழாவில் விஜய் என்ன பேசுவார் என்று கேட்கத்தான் ரசிகர்கள் அனைவரும் காத்திருக்கின்றனர். அதில் விஜய் தன் வீட்டில் நடந்த வருமான வரித்துறை சோதனை பற்றியும் பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

சென்னை

டுவிட்டர், ஃபேஸ்புக் உள்ளிட்ட அனைத்து சமூக வலைத்தளத்திலிருந்தும் ஒதுக்கியிருப்பவர் அஜித்.  இதனிடையே, நேற்று (பிப்ரவரி 6) மாலை ஃபேஸ்புக் பக்கத்தில் அஜித் இணைந்திருப்பதாகத் தகவல் காட்டு தீ போல் ரசிகர்கள் மத்தியில் பரவியது. மேலும், அது தொடர்பாக அஜித் கையெழுத்திட்ட அறிக்கையும் வெளியானதால் உண்மையாக இருக்குமோ என்று ரசிகர்களும் உற்சாகமானார்கள். இது தொடர்பாக அஜித் தரப்பில் இருந்து "அந்த அறிக்கை பொய்யானது" என்று தகவல் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் அஜித் தரப்பு வழக்கறிஞர் சார்பில் அறிக்கை விடப்பட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது:

சமூக ஊடகங்களில் நடிகர் அஜித்துக்கு அதிகாரப்பூர்வ கணக்குகள் எதுவும் இல்லை. அஜித் வெளியிட்டதாக உலாவரும் கடிதம் பொய்யானது. எந்த சமூக ஊடகங்களிலும் இணைய அஜித்துக்கு விருப்பம் இல்லை. சமூக வலைதளத்தில் எந்த ஒரு ரசிகர் பக்கத்தையும், குழுவையும் அஜித் ஆதரிக்கவில்லை.  

சமூக வலைதளங்களில் அஜித் இணைய உள்ளதாக அஜித் கடிதம் எதுவும் வெளியிடவில்லை.  தவறான கடிதத்தை வெளியிட்டு கையெழுத்து மோசடி செய்த நபர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தி நடிகை ஷில்பா ஷெட்டி. தமிழில் பிரபுதேவா நடித்த மிஸ்டர் ரோமியோ படத்தில் கதாநாயகியாக நடித்ததுடன் பிரபுதேவாவுக்கு இணையாக நடனம் ஆடி கவர்ந்தவர். தமிழில் நிறையப் படங்களில் நடிப்பார் என்று எதிர்பார்த்த நிலையில் அடுத்து விஜய்யுடன் குஷி படத்தில் ஒரு பாடலுக்கு மட்டும் நடனம் ஆடினார்.

மீண்டும் இந்திக்கே திரும்பிச் சென்றார். ஷில்பா ஷெட்டி மற்றும் அவரது கணவர் ராஜ்குந்தரா மீது வெளிநாட்டு வாழ் இந்தியவர் சச்சின் ஜோஷி என்பவர் மும்பை போலீசில் ஒரு புகார் அளித்திருக்கிறார்.

ஷில்பா ஷெட்டி அறிவித்த, ஐந்து வருடம் தவணை முறையில் பணம் கட்டினால் 5 வது வருடத்தில் ஒரு கிலோ தங்கம் வழங்கும் திட்டத்தில் சேர்ந்திருந்தேன். 2014 ஆம் ஆண்டு முதல் 2019 ஆம் ஆண்டுவரை பணம் செலுத்தி வந்தேன். 5 வருட முடிவில் தங்கம் பெறுவதற்காக வந்தபோது அவர் நடத்தி வந்த நிறுவனம் மூடப் பட்டிருக்கிறது.

இதுபற்றி விசாரித்தபோது அந்த நிறுவனத்திலிருந்து ஷில்பா ராஜினாமா செய்துவிட்டதாகக் கூறப்படுகிறது. இந்த திட்டத்தில் 18.58 லட்சம் கட்டினேன். என்னிடம் ஷில்பா ஷெட்டி நகை திட்டத்தில் மோசடி செய்து விட்டார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகாரில் கூறப்பட்டிருக்கிறது. இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டிருக்கின்றனர்.

டைரக்டர் பிரியதர்ஷன் டைரக்‌ஷனில், கடந்த 1996 ஆம் ஆண்டு வெளியான படம், `காலாபாணி.’ மோகன்லால் கதாநாயகனாக நடிக்க, முக்கிய கதாபாத்திரத்தில் பிரபு நடித்திருந்தார். பிரபு நடித்த முதல் மலையாள படம், அது. இந்த படத்தை தமிழில், `சிறைச்சாலை’ என்ற பெயரில் எஸ்.தாணு வெளியிட்டார்.

25 ஆண்டுகளுக்குபின், மோகன்லாலும், பிரபுவும் `மரைக்காயர் அரபிக்கட லிண்டே சிம்ஹம்’ என்ற மலையாள படத்தில் இணைந்து நடித்து இருக்கிறார்கள். இந்த படத்தையும் பிரியதர்ஷனே இயக்கி இருக்கிறார். தமிழில், `மரைக்காயர் அரபிக்கடலின் சிங்கம்’ என்ற பெயரில் எஸ்.தாணு வெளியிடுகிறார்.

இந்த படத்தில் அர்ஜுன், சுனில் ஷெட்டி, மஞ்சுவாரியர், சுஹாசினி, கீர்த்தி சுரேஷ், கல்யாணி பிரியதர்ஷன், முகேஷ், நெடுமுடி வேணு, அசோக் செல்வன், சித்திக், சுரேஷ் கிருஷ்ணா ஆகிய நட்சத்திர பட்டாளமே நடித்து இருக்கிறார்கள். ஆண்டனி பெரும்பவூர் தயாரித்து இருக்கிறார்.

தமிழில் நெருங்கி வா முத்தமிடாதே மற்றும் அர்ஜூனுடன் நிபுணன் ஆகிய படங்களில் நடித்தவர் சுருதி ஹரிகரன். கன்னட படங்களிலும் நடித்துள்ளார். இவர் சில வருடங்களுக்கு முன்பு, நிபுணன் படப்பிடிப்பில் அர்ஜூன் அனுமதி இல்லாமல் என்னை கட்டிப்பிடித்தார் என்று மீ டூவில் புகார் கூறினார். இதனை அர்ஜூன் மறுத்தார். இந்த நிலையில் பாலியல் புகார் சொன்ன காரணத்தால் தனக்கு பட வாய்ப்புகள் குறைந்துவிட்டதாக சுருதி ஹரிகரன் குற்றம் சாட்டி உள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது:

எனது மீ டூ புகாரை சிலர் நம்பினர். சிலர் நம்பவில்லை. யாரையெல்லாம் நண்பர்கள் என்று நினைத்தேனோ அவர்கள் எனது நட்பை முறித்துக் கொண்டனர். இந்தி நடிகை தனுஸ்ரீ தத்தாவும், தமிழில் சின்மயியும் பாலியல் துன்புறுத்தல்களை வெளிப்படுத்தினர். அதன்பிறகே எனக்கும் தைரியம் வந்தது.

மீ டூவில் புகார் சொன்னால் என்ன பிரச்சினைகள் வரும் என்று ஒரு மாதம் யோசித்தேன். மற்றவர்களும் என்னை போல் பாதிக்க கூடாது என்று முடிவு செய்து சமூக வலைத்தளம் மூலம் வெளிப்படுத்தினேன். ஆனால் எதிர்பாராதவை நடந்தன. எந்த துறையிலும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்பது புரிந்தது. ஒரு வருடமாக எனது வாழ்க்கை என் கையில் இல்லை. சினிமாவில் நடிக்க என்னை அழைக்காமல் ஒதுக்குகிறார்கள். இதனை நான் எதிர்பார்க்கவில்லை. இவ்வாறு கூறியுள்ளார்.

கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன்-2 படப்பிடிப்பில் கிரேன் சரிந்து 3 பேர் பலியான விபத்து திரையுலகினரை உலுக்கியது. இதையடுத்து படப்பிடிப்புக்கு அளிக்கும் பாதுகாப்பு குறித்து படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைகாவுக்கு கமல்ஹாசன் கடிதம் எழுதினார்.

அதில் “சிரித்து பேசியவர்கள் இப்போது நம்மோடு இல்லை. படப்பிடிப்பில் கதாநாயகன் முதல் கடை நிலை ஊழியர்கள்வரை பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். படப்பிடிப்பில் விபத்து ஏற்பட்டால் அதற்கான முழு பொறுப்பையும் தயாரிப்பு நிறுவனமே ஏற்க வேண்டும். பாதுகாப்பு குறித்து படக்குழுவினருக்கு நம்பிக்கையை ஏற்படுத்தி படப்பிடிப்புக்கு திரும்புவதற்கான வழிவகையை செய்ய வேண்டும்” என்று குறிப்பிட்டு இருந்தார்.

இதற்கு பதில் அளித்து லைகா நிறுவனம் கமல்ஹாசனுக்கு எழுதி உள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:

தாங்கள் கடிதம் எழுதுவதற்கு முன்பாகவே தேவையான உதவிகள் அனைத்தையும் செய்து விட்டோம். விபத்தில் பலியானவர்களுக்கும், காயம் அடைந்தவர்களுக்கும் ரூ.2 கோடி வழங்கப்பட்டு உள்ளது. இந்தியன்-2 படப்பிடிப்பின் பாதுகாப்பு விஷயத்தில் லைகா நிறுவனம் குறை எதுவும் வைக்கவில்லை. லைகா நிறுவனம் உலக தரத்திலான பாதுகாப்பு முன்னெச்சரிக்கைகளை கொண்டது.

அனுபவம் வாய்ந்தவர்கள் மேற்பார்வையில் படப்பிடிப்பு நடந்ததால் அசம்பாவிதம் ஏற்படாது என்று நம்பினோம். ஆனால் விபத்து ஏற்பட்டு விட்டது. இதற்கு அனைவரும் பொறுப்பு ஏற்க வேண்டும். படப்பிடிப்பு பணிகள் அனைத்தும் இயக்குனர் மற்றும் உங்களுடைய மேற்பார்வையிலும், கட்டுப்பாட்டிலும் இருந்தன என்பதை நினைவுபடுத்துகிறோம். இவ்வாறு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

புதிய மொழி ஒன்றைக் கற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் நிறைய பேருக்கு இருக்கும். புதிய மொழி ஒன்றை உருவாக்க முடியுமா என்றால், `சாத்தியமே இல்லை பாஸ்' என்ற பதில்தான் வரும். ஆனால், முற்றிலும் புதிதாக ஒரு மொழியை உருவாக்கியிருக்கிறார் பாடலாசிரியர் மதன் கார்க்கி.

பாகுபலி படத்தில் காளகேயர்கள் பயன்படுத்தும் `கிளிகி' மொழியை இலக்கண விதிகளோடு முழுவதுமாக உருவாக்கியிருக்கிறார். ஹாலிவுட்ல இந்த மாதிரிப் படங்கள் அல்லது சீரிஸ்க்கென்றே தனியா மொழி உருவாக்கியிருக்காங்க. இந்தியாவில் பாகுபலியில்தான் முதன்முதலாக அப்படி ஒரு முயற்சி முன்னெடுக்கப்பட்டது. தற்போது அதை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்லும் முயற்சியில் இருக்கிறார்கள் மதன் கார்க்கி அன்ட் கோ.

பாகுபலி படம் பண்றப்போ அந்தப் படத்துக்குத் தேவையான அளவுல 700 வார்த்தைகள், 40 இலக்கண விதிகள் மட்டும் உருவாக்கினேன். அந்தப் படத்தைப் பார்த்துட்டு நிறைய பேர் இந்த மொழிய கத்துத்தர முடியுமானு கேட்டாங்க. அதற்கப்புறம் தான் இந்த மொழி மேற்கொண்டு உருவாக்கலாமேனு யோசனை வந்துச்சு.

நிறைய மொழிகள் கத்துக்கிறதுக்குக் கடினமா இருக்கும். அப்படி கடினமான விஷயங்கள் நிறைய இருக்கும் போது, கத்துக்கிறத பாதியிலேயே கைவிடுறவங்களும் நிறைய பேர் இருப்பாங்க. அதுனால நாமே இருக்கிறதுலையே சுலபமான மொழிய உருவாக்கக் கூடாதுனு யோசனை பண்ணேன். அதுனால மற்ற மொழியில நாம எதை எல்லாம் கஷ்டம்னு நினைக்கிறேமோ அது எதுவும் இல்லாம கிளிக்கிய வடிவமைச்சேன்.

ஆங்கிலம் கத்துக்கணும்னா 52 ஸிம்பல் தெரியணும், ஒரே எழுத்துக்கு இடங்களைப் பொறுத்து ஒலி வடிவமும் மாறுபடும். தமிழ்னு எடுத்துக்கிட்டா 110 ஸிம்பல்ஸ் தெரியணும். கிளிக்கி கத்துக்க வெறும் 22 ஸிம்பல்ஸ் தெரிஞ்சா போதும். கிளிக்கிய முழுசா எழுத படிக்க முடியும்.

கிளிக்கிக்கென்று தனியாக எண் வடிவங்களும் உருவாக்கியிருக்கிறார்கள். கிளிக்கி எண்களைக் கற்றுக்கொள்ள 2 நிமிஷம் போதும், கிளிக்கி எழுத்துகளை முழுமையாகக் கற்றுக் கொண்டு எழுத ஒரு மணிநேரம் போதும் என தம்ஸ் அப் காட்டுகிறார். இதில் இருக்கின்ற இலக்கணங்களும் மிகவும் எளிமையாக நினைவில் வைத்துக்கொள்ளும்படிதான் வடிவமைத்திருக்கிறார்.

"எழுத படிக்கறது கஷ்டமா இருக்குனு சிலருக்கு இயல்புலேயே இருக்கும். அவங்களும் சுலபமா கத்துக்கிற மாதிரிதான் இதை வடிவமைச்சிருக்கேன். `உலகத்தோட ஈஸியான மொழி' அப்படிங்கிறதுதான் கிளிக்கி மொழியோட அடிப்படை கான்செப்ட்.

அசுரன் திரைப்படத்தை தொடர்ந்து தனுஷ் நடிக்கும் கர்ணன் திரைப்படமும் சர்ச்சையில் சிக்கியுள்ளது. தற்போது மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் கர்ணன் திரைப்படத்தில் நடிகர் தனுஷ் நடித்து வருகிறார். சமீபத்தில் இந்த படத்தின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகின. அதில் ஒரு புகைப்படத்தில் பழைய காவல் நிலையம்போல வண்ணம் தீட்டப்பட்டதுடன், அதில் மணியாச்சி காவல் நிலையம் என்று எழுதப்பட்டிருந்தது.

தென் தமிழகத்தில் நடைபெற்ற கொடியன்குளம் மணியாச்சி சாதி கலவரத்தை மையப்படுத்தி இப்படம் உருவாவதாக தகவல் பரவியது. ஆனால், தற்போதுவரை படக்குழு இதுகுறித்து எந்தவித விளக்கமும் அளிக்கவில்லை. நடிகரும் எம்.எல்.ஏ-வுமான கருணாஸ் நடத்தி வரும் தமிழ்நாடு முக்குலத்தோர் புலிப்படை எதிர்ப்பு தெரிவித்து, அறிக்கை ஒன்றை வெளியிட்டது.

அதில், 1991-ல் கொடியன்குளம் மணியாச்சி சாதி கலவரத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்டு வரும் 'கர்ணன்' படத்தைத் தடை செய்ய வேண்டும் மற்றும் அந்த படப்பிடிப்பை திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டத்தில் எடுப்பதற்குத் தடை விதிக்கவேண்டும் என வலியுறுத்தியது. மேலும் இதுதொடர்பாக அந்த அமைப்பு நிர்வாகிகள் சார்பில் நெல்லை காவல்துறை சரக துணைத் தலைவரிடமும் புகார் மனு அளித்துள்ளனர்.

உண்மை நிகழ்வுகளை மையமாக கொண்டு எடுக்கப்பட்டு வரும் கர்ணன் திரைப்படத்திற்கு கருணாஸ் தரப்பு எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் படக்குழு என்ன செய்யப்போகிறது என்பதே தற்போதைய எதிர்பார்ப்பு. ஏற்கனவே உண்மை நிகழ்வுகளை வைத்து தமிழில் பல படங்கள் வெளிவந்த நிலையில் கர்ணன் படத்திற்கு மட்டும் எதிர்ப்பு ஏன் என்பது அப்படத்தை ஆதரிப்பவர்களின் கேள்வியாக உள்ளது.

Page 1 of 4

Latest Tweets

Want to run Webinars and Meetings inside an online course format? Then incorporate Zoom service with Turitor WP Edu… https://t.co/KlwEX0VTrE
@envato_help After 4 months I submit a WP Theme. But 6 days without reply : https://t.co/4G411tjDaT Is this curren… https://t.co/1fLk2ThrOW
We are Author Level 10 @ #Envato Market ! Thanks our customers, supporters. Profile : https://t.co/Fgw71WDhV6 https://t.co/vK9O9lXg06
Follow Themewinter on Twitter

Post Gallery

Year of Disappointment, Disastrous Management and Diabolical Pain, Says Congress on Modi Govt Anniversary

Bombay HC Seeks Report from Maharashtra Govt on Steps Taken for Migrant Workers

Religious Places, Hotels, Malls to reopen from June 8

Unlock 1 - Lockdown in containment zones till June 30

போருக்கு தயார் ஆகுங்கள் - சீன ராணுவத்திற்கு அதிபர் ஜிங்பிங் உத்தரவு.

படுக்கை அறைக்கு விஷ பாம்பை அனுப்பி மனைவியை கொன்ற கணவன்

சென்னையில் இன்று ஒரே நாளில் 549 பேருக்கு கொரோனா

இந்தியாவில் உள்நாட்டு விமான சேவை துவங்கியது

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 765 பேருக்கு கொரோனா - மொத்த பாதிப்பு எண்ணிக்கை 16,277.